என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற ‘ஹாப்பி ஸ்டீரிட்’ நிகழ்ச்சியில் வாவ் மதுரை லோகோவினை அமைச்சர்கள் மூர்்த்தி, பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டனர். அருகில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., நடிகர் சூரி உள்பட பலர் உள்ளனர்.
மதுரையில் 'ஹாப்பி ஸ்டீரிட்' கொண்டாட்டம்
- மதுரையில் ‘ஹாப்பி ஸ்டீரிட்’ கொண்டாட்டம் நடந்தது.
- பெண்கள் மயங்கி விழுந்ததால் இடையில் நிறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களின் ஒரு பகுதி.
மதுரை
மதுரை அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் இன்று 'ஹாப்பி ஸ்டீரிட்' விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக நடிகர் சூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வாவ் மதுரை லோகோவை அமைச்சர்கள் வெளியிட்டனர். இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் பகுதியில் இருந்து மேலமடை சந்திப்பு வரை உள்ள சாலை முழுவதும் இளம்பெண்கள், சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள் திரண்டிருந்தனர்.
ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம், வேடிக்கை விளையாட்டு கள் என நிகழ்ச்சி களை கட்டியது. பலர் தொடர்ந்து உற்சாக கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். குறுகலான சாலையில் ஆயிரக்க ணக்கானோர் திரண்டதால் நெரிசல் அதிகமாக இருந்தது. சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு மக்கள் குவிந்தி ருந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாலும், நெரிசலில் சிக்கியும் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை யோரம் அவர்களை அமர வைத்து தண்ணீர், பழச்சாறு கொடுத்து ஆறுதல் படுத்தினர்.
அடுத்தடுத்து பல பெண்கள் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி இடையிேலயே நிறுத்தி வைக்கப்பட்டது.






