search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebration"

    • முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரி யார் நகரில், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி யின் குழந்தைகள் தின விழா, முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

    பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினர். டாக்டர் ரங்க நாயகி வளவன், ஜிப்மர் இதயவியல் துறை டாக்டர் இளவரசி சங்கர் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    டாக்டர் ரத்தின வசந்தன், பல் மருத்துவர் நீனா வசந்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேச தலைவர்கள் போன்று குழந்தைகள் மாறுவேடமிட்டு கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலை யர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட் சுமி,சோனியா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

    செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமராஜ் மற்றும் புரவலர் செல்லமுத்து முன்னிலை வகித்தனர். கீரம்பூர் நூலகர் நூர்அஹமது வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற துறையூர் ரோட்டரி சங்க தலைவரும் புள்ளியியல் துறை துணை இயக்குனராக பணி நிறைவு பெற்ற தில்லைநாயகம் சிறப்புரையாற்றினார். முடிவில் செங்காட்டுப்பட்டி நூலகர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

    நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்
    • விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மரங்கள் பவுண்டேசன் சார்பில் குழந்தைகள் தின விழா மாவனல்லா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டுகளில் பயன் படுத்தப்பட்ட இணைப்பு வகைகள் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக, சிங்கப்பெண்ணே அமைப்பு ஹேமலதா மற்றும் அனன்யா , நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மரங்கள் பவுண்டேசன் நிறுவனர் தலைவர் சாதிக் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் குழந்தைகள் தினவிழாவை சிறப்பாக நடத்தினார்கள். விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    • நேரு பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பள்ளியில் புத்தகமில்லா தினம் கொண்டாடப்பட்டது
    • நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் குழந்தைகள் மகிழ்ச்சி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.

    புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, அபிராமசுந்தரி, வரவெலட்சுமி, கோபமதிப்பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியை சிவதர்சினி செய்திருந்தார்.

    புத்தகமில்லா தினம் கொண்டாடிய போது எடுத்தப்படம்.

    • வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் நடந்தது.
    • வரும் 18-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    இந்த கோவிலின்உட்பிர காரத்தில் வள்ளி, தேவயானை சமேத ஆறுமுகக்கடவுள் அமைந்துள்ளது.

    இந்த ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நேற்று 13.11.2023 மாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுப்பிர மணியசுவாமி கேடயத்தில் நான்கு வீதிகளில் வீதியுலா காட்சி நடந்தது.

    விழா நாட்களில் மயில் வாகனத்தில் எழுந்தருளி தினசரி வீதியுலா நடை பெறும்.

    வரும் 18.11.2023 அன்று இரவு வேதாரண்யம் மேலவீதியில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.

    • நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி தினத்தன்று அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். பின்னர் வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்

    இதனால் நெல்லையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இன்று தீபாவளிக்கான இறுதி நாள் விற்பனை என்பதால் நெல்லையில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு ரதவீதியில் உள்ள ஜவுளிகடைகளில் புத்தாடைகள் வாங்க பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சாலையின் இருபுறமும் உள்ள பிளாட்பார கடைகளில் பொதுமக்கள் ஆடைகள் எடுப்பதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.

    இதேபோன்று பாளை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாரம்பரிய பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சென்று சீடை, முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதவிர வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கும் பாளை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் வண்ணார்பேட்டை சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதற்கிடையே கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஆதார்ஷ் பசேரா, அனிதா, சரவணகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 600 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,000 போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பா லம், முருகன்குறிச்சி சாலை, சமாதானபுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான டவுன் ரதவீதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஆகிய இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட காமிராக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராள மானவர்கள் நெல்லைக்கு வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான பயணிகள் குடும்ப த்தினருடன் வந்திறங்கினர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்க ளில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிறப்பு பஸ்கள் மூலமாக ஏராளமானவர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் .

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது .

    ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் லட்சுமி பூஜை வழிபாடு செய்து கார்த்திகை தீபங்களை ஏற்றி ஒளிபரவச் செய்தும் வண்ணமலர்களால் பள்ளியை அலங்கரித்தும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மேலும் மாணவர்கள் தீபத்திருநாளை கொண்டாடும் முறைகளை விளக்கும் நாடகங்களையும் நடனங்களையும் நிகழ்த்தி மகிழ்வித்தனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் . பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா ஒருங்கிணைத்தார்.

    • திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர்
    • பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர். இதில் மழலை மலர்கள் வண்ண உடை உடுத்தி, மலர்களாக வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். இதில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
    • கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா நடந்தது. அப்போது கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன்,மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கோத்தகிரி.ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலளர்கள் ஹேம்சந்த், பேரட்டி ராஜி,மீனவர் அணி.மாவட்ட செயலாளர் விசாந்த், பேரவை மாவட்ட துணை செயலாளர் வடிவேல், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளரும், எப்பநாடு ஊராட்சி தலைவருமான சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்திற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் 37வது வார்டில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவிக்னேஷ் ஏற்பாட்டில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அவர்களின் உடல்நலம் பேணும் வண்ணம் அவர்கள் தங்கி பயிலும் விடுதியின் அருகே கால்பந்து மைதானம், இறகுபந்து அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளடங்கிய விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டென் எக்ஸ் விளையாட்டு பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஸ்வேதா, ராயபுரம் பகுதியை சேர்ந்த பூர்ணபிரசாத், அஜய், பிரவீன், தினேஷ் மற்றும் மாணவர் அணி செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×