search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery management board"

    • தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
    • நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கூறி உள்ளது.

    சென்னை:

    டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடும் நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.

    இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கூறி உள்ளது.

    இது தமிழகத்துக்கு போதாது. நேற்றைய கூட்டத்தில் கர்நாடகா அரசு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை மட்டுமே வினாடிக்கு திறந்து விட முடியும் என கூறியது. இது தமிழகத்துக்கு போதாது. எனவே 45 டி.எம்.சி. நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

    • கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும்.
    • மிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    பெங்களூரு:

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது.

    இதனை சரி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது.

    ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக மாநில அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனைக்கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14-ந் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தி தமிழகம், கர்நாடகா முன் வைக்கும் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தியதா? என்பது குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் தேவை எனவும் அணைகளில் தற்போதைய நீர் இருப்பு விவரம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

    இதனிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள 2 வாரங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பான, ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கர்நாடக அணைகளில் இருந்து, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடும்படி பரிந்துரை செய்யப்பட்டது.

    இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது.

    கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    தற்போது கர்நாடக அணைகளில் குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன் பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 295 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 1,891 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 101.82 அடியாக உள்ளது.

    அதுபோல் கபினி அணைக்கு 1,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 73.77 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெறுவது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கர்நாடக அரசின் போக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க வேண்டும்" என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

    ஆனால் கர்நாடக அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

    இதற்கிடையே, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனாலும் கர்நாடக அரசின் போக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    கடந்த 25-ந்தேதி வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்ற விவரத்தையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

    அதுமட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்த மனு மீதும், ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.

    டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளது. இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும்.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் மூலமாக வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

    இதற்கிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள இரு வாரங்களுக்கான நீர் குறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 25-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மத்திய நீர்வளத்துறை தெரிவித்து இருந்தது.

    அதன்படி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு அதிகாரிகள் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக கருத்துகளை முன்வைத்தனர்.

    • மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதே போல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அந்த ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.

    ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதற்கிடையே கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், எங்களிடம் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கூறினார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் 10ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டமும் 78.70 அடியாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18ஆயிரத்து 145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லமான கிருஷ்ணாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் ஆகியோர் மைசூரு, மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மைசூரு, மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு முடிந்த அளவு தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்அமைச்சர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்குமேல் எங்களிடம் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய மனுதாக்கல் விரைவில் செய்யப்படும்.

    மேலும் தண்ணீர் திறப்பின் கட்டுப்பாடு தற்பொழுது வரை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் காங்கிரஸ் அரசு தண்ணீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகின்றனர்.

    வறட்சி காலத்தில் தற்போது போல் பா.ஜ.க. அரசு காலத்தில் தமிழகத்திற்கு ஆணைய உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கடந்த கால குறிப்புகள் எங்களிடம் உள்ளது. அதை தக்கசமயத்தில் வெளியிட்டு இந்த பிரச்சினையில் அரசியல் செய்துவரும் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டப்படும்.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும்.

    மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. விவசாய தேவைகளை விட குடிநீர் தேவைக்காக தண்ணீரை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த சூழலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் பொம்மை அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன் அவரது ஆட்சிக் காலத்திலும், தமிழகத்திற்கு நெருக்கடியான காலங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் தண்ணீர் விடப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது.

    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் திரும்பி வரும் போது 'கோ பேக் ஸ்டாலின்' என்று போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அண்ணாமலை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சினையை வைத்து முழுக்க முழுக்க அரசியல் செய்ய நினைக்கிறார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்கிறார். அதை பிடித்துக் கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.

    நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணை கட்ட முடியாது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி அண்ணாமலை எதுவும் பேசாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர். 'மண்ணின் மைந்தர்' இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருப்பாரா? விட்டுத்தான் கொடுப்பாரா? தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது.

    இந்த பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதாதானே. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வ ளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று விட்டார்கள். சட்டப்படி அந்த அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் இருந்ததால் ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வாய்மூடிமவுனமாக இருந்துவிட்டது.

    அப்போது தமிழகத்தில் பா.ஜனதா இருந்ததா என்பதே தெரியவில்லை. இந்த செயல்கள் அண்ணாமலைக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே திசை திருப்புகிறாரா?

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.

    அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா?

    முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பெங்களூரில் நடக்கப் போவது எதிர்க்கட்சிகள் கூட்டம். அதற்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் பா.ஜனதா காரர்கள் பெங்களூர் செல்லமாட்டார்களா?

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.
    • தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    காவிரியில் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டி.எம்.சி. அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும்.

    ஆனால் கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, "கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இப்போது தண்ணீர் திறக்க முடியாது" என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை முறைப்படி இன்னும் திறந்து விடவில்லை. இதனால் ஜூன், ஜூலை மாதங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேரவில்லை.

    எனவே கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தர விட வேண்டும். ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும்.ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்கவும் கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இப்போது தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி இருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை உருவாகி வருகிறது.

    இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதால் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். அவருடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் செல்கிறார்.

    டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசும்போது, "கர்நாடக அரசு உத்தேசித்து உள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதால் மத்திய அரசு ஒரு போதும் இதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்த உள்ளனர்.

    • தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
    • ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட்டப்பட உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
    • ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது.

    தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 23-ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    • காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியிருந்தார். இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம், இது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பது தவறானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை.
    • உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக மாநில முதல்-அமைச்சரின் கூற்று உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது.

    இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதை எதிர்ப்பது மனிதாபிமான மற்ற செயல் என்றும் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

    தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுவதைத் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கும் செயல்தான் மனிதாபிமான மற்ற செயல் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டுமென்ற நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.

    இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூரு குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டுதான், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் பங்கான 192 டி.எம்.சி. நீரை 177.25 டி.எம்.சி. அடியாக குறைத்து உத்தரவிட்டது.

    அதாவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கர்நாடகாவின் நீர்ப்பங்கீடு அளவு 270 டி.எம்.சி.யிலிருந்து 284.75 டி.எம்.சி.யாக உயர்த்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்வது நியாயமற்ற செயல்.

    தற்போது மேகதாது அணை குறித்த பொருள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17-06-2022 அன்று நடைபெற உள்ள 16-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக செய்தி வந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி கூட்டம் 23-06-2002 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, காவேரி நீரின் இருப்பை கண்காணிப்பது, பிரித்தளிப்பது, முறைப்படுத்துவது மற்றும் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும்.

    இதைவிடுத்து, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்படும் என்று கூறுவது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். அதிகார வரம்பிற்கு உட்படாத, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×