என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
    X

    தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

    • தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
    • நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கூறி உள்ளது.

    சென்னை:

    டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடும் நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.

    இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கூறி உள்ளது.

    இது தமிழகத்துக்கு போதாது. நேற்றைய கூட்டத்தில் கர்நாடகா அரசு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை மட்டுமே வினாடிக்கு திறந்து விட முடியும் என கூறியது. இது தமிழகத்துக்கு போதாது. எனவே 45 டி.எம்.சி. நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×