search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery Management Authority"

    ஜூன் மாதத்தில் கர்நாடகா கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதால், அதுபோக ஜூலை மாதத்துக்கான மீதியை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியுள்ளார். #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசைன் கூறியதாவது:-

    நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    அதுபோக, ஜூலை மாத பங்கீட்டை கர்நாடகா திறந்து விட வேண்டும்.  காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்.

    என அவர் கூறினார். தமிழக உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் செயல்படுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் பார்க்கப்படும். கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் எந்த கருத்தையும் கூட்டத்தில் முன் வைக்கவில்லை” என தெரிவித்தார்.
    காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெருமையுடன் அறிவித்தார். #CauveryIssue #EdappadiPalaniswami #CauveryManagementAuthority
    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய  31 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த தகவலை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக அவர் கூறினார்.  #CauveryIssue #EdappadiPalaniswami #CauveryManagementAuthority
    டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்னீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     

    கூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என கூறினார்.

    ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
    காவிரி ஆணைய நடவடிக்கை தெரிந்தபிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினை தொடர்பாக நீண்ட நெடுங்காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    அதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது நல்ல முறையில் நடந்து நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் நமக்கு 14ž டி.எம்.சி. தண்ணீர் இழப்புதான். என்றாலும் இந்த தண்ணீராவது நமக்கு நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள்.

    காவிரி நீரை நமக்கு தராமல் தடுக்க கர்நாடக முதல்-மந்திரி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில் நமது உரிமைகளை பெரும்வகையில் உறுதியாக இருக்க வேண்டும். அதிக மழை பெய்து வரும் வெள்ளத்தையெல்லாம் நமது பங்கில் அவர்கள் கணக்கு வைத்துவிடக் கூடாது. சுமூகமான முறையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எதிரான கருத்து இல்லை.

    கர்நாடக முதல்-மந்திரி பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். எனவே இன்றைய முதல் கூட்டத்தில் நமது கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் காவிரி பற்றிய அனைத்து கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். இந்தப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. 15 ஆண்டு இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.



    காவிரி ஆணையம் தொடர்பாக குழு அமைப்பது பற்றியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவது குறித்தும் விளக்கமாக சொன்னது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் உடனே நியமிக்கப்பட்டனர். கர்நாடக அரசும் குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நமது தரப்பில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதை நமது பிரதிநிதிகளுக்கு சொல்லி இருக்கிறோம். மூத்த அமைச்சர்கள், அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து பேசி அவர்கள் செயல்பட வேண்டிய முறைகளை தெரிவித்து இருக்கிறோம்.

    முதல் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இப்போது கூடி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப் படி நமக்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஒழுங்காற்று குழு கூடி நமக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயிப்பார்கள்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்திற்கு பிறகு அது செயல்படும் விதம் நமக்கு தெரிய வரும். அதன் பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாம் தக்க முடிவை எடுப்போம்.

    இவ்வாறு பழனிசாமி பேசினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami

    கர்நாடகத்தின் எதிர்ப்புக்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்த மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழகம் வலியுறுத்தும் என்று தெரிகிறது. #Cauveryissue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.



    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். புதுச்சேரியின் சார்பில் அந்த மாநில பொதுப் பணித்துறை செயலாளர் அன்பரசு கூட்டத்தில் பங்கு கொள்கிறார். இதற்காக நேற்று அவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும், ஆணையத்தின் வரவு-செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக அந்த கூட்டத்தின் அலுவல் திட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன. இந்த மாதம் (ஜூலை) 30 டி.எம்.சி. தண்ணீரையும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 50 டி.எம்.சி. தண்ணீரையும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும். அத்துடன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது தவறு என்பதை சுட்டிக்காட்டவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் எடுத்துரைப்பார்கள் என்று தெரிகிறது. இதேபோல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிப்பார்கள்.#Cauveryissue #CauveryManagementAuthority
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு செல்ல இருப்பது அநியாயத்தின் உச்சக்கட்டம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செல்ல இருப்பதும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம்.

    கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, சட்டத்துக்கு மாறாக தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு, வரும் 15 ஆண்டுகளுக்கு எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்று இறுதியாக, முடிவாக அறிவித்த பிறகும் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்தை எதிர்ப்பதும், மேல் முறையீட்டுக்கு செல்ல இருப்பதும் சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும் எதிரானது.

    எனவே, மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இனியும் கால தாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பங்கிட்டு வழங்க வேண்டும். தமிழக அரசும் எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என முட்டுக்கட்டை போட்டஅம்மாநில முதல்வர் குமாரசாமி, இன்று ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து அறிவித்தார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு மாநிலங்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் அதற்கான உறுப்பினரை கர்நாடகா நியமிக்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். #CauveryIssue
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    ஆனால், இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வந்தது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக பிரசன்னாவை நியமித்துள்ளார். ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க 3 நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார். 
    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க இன்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது.

    இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசும் உறுப்பினர் பட்டியலை தயார் செய்து நீர்வளத்துறைக்கு அனுப்பியது. மேலும், இதர மாநிலங்களான கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது உறுப்பினர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர் பட்டியலை அனுப்பவில்லை. 

    சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டார். 

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், வரும் 12-ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்துக்கான காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் கர்நாடக அரசு விரைவில் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #CauveryManagementAuthority
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

    இந்த வாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
    #CauveryManagementAuthority
    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.

    இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநிகளை நியமித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #CauveryWaterManagement #CauveryManagementAuthority
    சென்னை :

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் கூட்ட முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CauveryWaterManagement #CauveryManagementAuthority  
    ×