search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபுணர்கள்"

    • சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நீர்மூழ்கிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் சென்னையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் சீர்காழிக்கு வந்தனர். பின்னர் சீர்காழி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்தனர். அப்போது அந்த சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக சுசான்லி டாக்டர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது.

    கடலூர்:

    புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் ரிசர்ச் சென்டரின் 25 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது. விழாவிற்கு தி சுசான்லி குழுமத்தின் சேர்மனும், கவுன்சிலின் நிறுவனத் தலைவருமான டாக்டர் ரவி தலைமை தாங்கினார். இதில் 25-ம் ஆண்டின் தலைவராக தி சுசான்லி குரூப்ஸின் சேர்மன் டாக்டர் ரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    செயலாளராக ராஜலிங்கம் , பொருளாள ராக அனந்தகிருஷ்ணன், உதவி தலைவராக மனோஜ், இணைபொருளாளராக கிருஷ்ணசிவசலபதி, இணை செயலாளர்களாக சுந்தரமூர்த்தி மற்றும் நெல்லை ஆசுகவிநவநீதகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக புகழேந்தி, பீலிப்ராஜ்ரவி, சாராதாஸ்ரீ, சுகன்யா, அசோக்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பேராசிரியை டாக்டர் உஷாரவி " பிரைன் ஃபாக் " என்ற டிங் ஜாங் புராஜக்ட் 2-வது முறையாக தொடங்கினார். புதிய நிர்வாகிகள் பொறுப்பு பெற்றவுடன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மண்டல உதவி தலைவர்கள் மற்றும் உயர்மட்டக்குழு ஆகியவற்றை டாக்டர் ரவி அறிவித்தார். உயர்மட்டக் குழுவின் தலைவராக தி சுசான்லி குழும இணை இயக்குனர் பேராசிரியை டாக்டர் உஷாரவி , இணை தலைவராக அறிவழகன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அரசு அக்குபஞ்சர் நிபுணர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். அக்குபஞ்சர் அறிவியல் ஆய்விற்கென தனிநிதி ஒதுக்க வேண்டும். பட்டம், பட்டயம் போன்ற அக்குபஞ்சர் பயிற்சியினை அரசு கல்லூரிகளில் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் நிபுணர்கள் பங்கேற்றனர். முடிவில் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.

    இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    ×