search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேநீர்"

    • வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார்.
    • 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்த சாதனை முயற்சி.

    தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

    ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார்.

    தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

    சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார்.

    இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

    சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.

    2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    • சுத்தமாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
    • சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்களுக்கு 12 கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    உணவகம் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக மாநகராட்சி மூலம் தொழில் உரிமம் பெற்று அவரவர் நிறுவனங்களில் வைத்திருக்க வேண்டும். ஓடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    அனைத்து உணவகங்களிலும் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சமையல் செய்யும் இடத்தினை கடையின் உட்பகுதியில் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் புகை போக்கி எந்திரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலுக்குட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.

    சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.அனைத்து உணவகங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வைக்கப்பட வேண்டும் . வர்ணம் பூசுதல் உள்ளிட்ட வருடாந்திர பராமரிப்பு நிறுவனங்களில் முறையான இடை வெளிகளில் செய்யப்பட வேண்டும்.உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.

    சமையல் அறை உள்ளிட்ட உணவகம் மற்றும் தேநீர் விடுதியின் அனைத்து அறைகளில் தரை தளங்களும் நீர் புகாதவாறு உறுதியாகவும் , சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் . அனைத்து கடைகளிலும் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் . அனைத்து கடைகளின் முன் பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    மேற்படி குறைபாடுகளை 10 தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய ேவண்டும். மேலும் தவறும் பட்சத்தில் கடை மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    • 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ, காபி, வடை ஆகிய எது வாங்கினாலும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது
    • இதனால் காலை முதலே அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.

    திண்டுக்கல், ஆக.15-

    நாட்டின் 76-வது சுதந்திர தினவிழா இன்று கேலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ, காபி, வடை ஆகிய எது வாங்கினாலும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சாலையில் உள்ள ஸ்ரீசாய் தேநீர் கடையில் இந்த விற்பனை இன்று அதிகாலை முதல் நடைபெற்றது.

    வழக்கமாக திண்டுக்கல்லில் ஒரு டீயின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதேபோல் ஒரு வடையின் விலை ரூ.5 முதல் ரூ.8 வரை விற்கப்படுகிறது.

    இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சலுகை விற்பனையால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் குவிந்தனர். சலுகை அறிவிப்பால் அளவு குறைவாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த நிலையில் வழக்கமாக விற்கப்படும் அதேஅளவில் டீ மற்றும் வடை விற்கப்பட்டது. இதனால் காலை முதலே அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.

    ×