search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • விபத்து நடந்த இடத்தில் காரின் நம்பர் பிளேட் இருந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டம், சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து வேலைக்காக ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

    பக்கிரி தக்கா சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஞானசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஞானசேகரன் உயிரிழந்த இடத்தில் விபத்து ஏற்படுத்திய காரின் நம்பர் பிளேட் இருந்துள்ளது.

    இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.

    சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.

    மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.

    விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
    • நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா நேற்று இரவு தனது காரில் உத்தரஹள்ளியில் இருந்து சோணனகுண்டே பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    பெங்களூரு வசந்தபரா மெயின் ரோட்டில் சென்ற போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணா (வயது 58) அவரது மனைவி பிரேமா (48) ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே நடிகர் நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே பிரேமா இறந்து விட்டார். கிருஷ்ணா இரு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குமாரசாமி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம் சேர்ந்தவர்கள் பரிதா (வயது 37), சின்னபாப்பா(55), ஜெயமணி (38). இவர்கள் அதே பகுதியில் உள்ள பகுதியில் இன்று காலை பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பால் ஊற்ற வந்த 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக பரிதா மற்றும் ஜெயமணி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார்.
    • விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சியில் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்.

    இவர் தனது மனைவியுடன் காரில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் பகுதியில் வந்தது.

    அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசும், அவரது மனைவியும் காப்பாற்ற யாராவது அந்த வழியாக வருகிறார்களா? என்று பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக வரவில்லை.

    இதனால் ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார். மேலும் போன்மேப் மூலம் அவர்கள் வாய்க்காலில் சிக்கி கொண்ட இடத்தை தெரிவித்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கிய ரமேசையும், அவரது மனைவியையும் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். பின்னர் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த காரை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.

    • ஆகாஷ் சந்திரன் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.
    • இதில் அந்த வழியாக நடந்து சென்ற பூமிநாதன் ,கலாமணி , விஜயாமற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் சந்திரன் (வயது 49). இவர் நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் சந்திப்பு பகுதிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டி ருந்தார். அவர் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.

    இதனால் காரை ஆகாஷ் சந்திரன் திருப்பியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வாகனம் மீது மோதி அதன் அருகில் நின்று கொண்டி ருந்த கொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது.

    அதன் பின்னர் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியபடி நின்றது. இதில் அந்த வழி யாக நடந்து சென்ற பாளை கிருஷ்ணன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த பூமிநாதன் (64), மாநகராட்சி தூய்மை பணியாளர்களான அம்பேத்கர் காலனியை சேர்ந்த கலாமணி (49), திருமலை தெரு விஜயா (38) மற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது62). மண்பானை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் வியாபாரம் சம்பந்தமாக ஒரே மோட்டார் சைக்கிளில் புலியூர் நோக்கி சென்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே சென்றபோது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனுசாமியும், அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.

    இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னை பதிவு எண் கொண்ட காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த தீரன் சின்னமலை தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து ஊத்தங்கரை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த படதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி மகன் தீபன் என்பவர் மீது கார் மோதியது.

    இதில் தீபன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த காரில் 30 குட்கா மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.

    விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்தனர்
    • காயத்துடன் உயிர்பிழைத்த ஒருவர் மருத்துவமனையில அனுமதி

    மத்திய பிரதேச மாநிலம் சகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து சகர்-ஜபால்புர் சாலையில் பமோரி தூதார் அருகில் நடைபெற்றது. சொகுசு காரில் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஏழு பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை, பக்தர்களை ஏற்றிக் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கன்வாரி பக்தர் ஒருவர் உயிரிழந்தார் 15 பேர் காயம் அடைந்தனர்.

    ×