search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி விபத்து"

    • சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துகாளிப்பட்டியை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த சதீஷ் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.
    • மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி செல்லும் சாலையி்ல், கார் ஒன்று சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்ததால் மின்சாரம் துண்டிக்கபட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதால் பொது மக்கள் அவதி குள்ளாகியுள்ளனர்.

    இது குறித்து கே.கே நகர் குடியிருப்பு வாசிகள் கூறும்போது:-

    வெண்ணாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீடுகளிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து என்ன நடந்தது என விசாரித்த போது தான் தங்களது குடியிருப்புகளுக்கு அருகே, கார் ஒன்று சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

    மேலும் காரினை ஓட்டி வந்தவர் அளவுக்கதிகமாக மது போதையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடியில் அவதிபட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் படிக்க முடியாமல் அவதிக்குள்ளா கியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து சம்மந்தப்பட்ட மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், நாளை பகல் பொழுதி்ல். தான் பிரச்சனையை சரி செய்து குடியிருப்புகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க முடியும் என அலட்சியமாக தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதி விடிய, விடிய இருளில் மூழ்கியது. தருமபுரியில் இருந்து வெண்ணாம்பட்டி செல்லும் சாலை முக்கிய சாலையாக இருந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளான மின் கம்பம் சாயும் தருவாயில் உள்ளது .

    இந்நிலையில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.
    • அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை சாலையில், தாலுக்கா அலுவலகம் பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு உள்ளது.

    இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு, இரவில் அந்த வழியாக வந்த கார், தாலுக்கா அலுவலகம் எதிரே தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அதே போல், நேற்றும் இரவு அதே இடத்தில் ஒரு கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்கவர் மீது மோதி நின்றது.

    அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர். சத்தியமூர்த்தி (28) கடந்த ஆண்டு ஆற்காடு - செய்யாறு சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.

    விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    • கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
    • டிரைவர் விக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    வேலூர் மாவட்டம் திருப்ப த்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் மனைவி பரிமளா (வயது 40), மகன் தருண்ராஜ் (19). உடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது. அப்போது கார் டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பழனிவேலின் மனைவி பரிமளா, மகன் தருண்ராஜ் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட விக்கியை சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் தருண்ராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் விக்கிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பழனிவேலை அவரது உறவினர்கள் மேல்சிகி ச்சைக்காக பங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 3 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது.

    • 3 பேர் பலி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    சென்னை அடையாறு பகு தியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரச வத்தில் பிறந்தவர்கள்.

    தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.

    மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண் டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதிலாரிக்கு அடியில் புகுந் தது.

    இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபா டுகளுக்குள் சிக்கி கார் டிரை வர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தர ணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் விட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலைகளை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக வாலாஜா அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் சிங்கார பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40) இவர் கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று நாட்டறம்பள்ளி அருகே வெல்லக்கல்நத்தம் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு மீண்டும் ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பைனப்பள்ளி அருகே வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • காட்பாடியை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காட்பாடி அடுத்த தேம்பள்ளி அருகே ஸ்ரீபாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35), இவர் அவரது மாமாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை, சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி தொழிலாளர்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.லாலாபேட்டை அருகே பொன்னை சாலை ரெண்டாடி கூட்ரோட்டில் தொழிலாளர்களை இறக்கிவிட்டு விட்டு பிறகு காரில் மேல்பாடி வழியாக ஸ்ரீபாதநல்லூருக்கு பொன்னை சாலையில் சென்றார்.

    குமணந்தாங்கல் அருகே வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அருளின் அண்ணன் ஸ்டான்லி, சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப் பாட்டை இழந்து பாலத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அருகே நீலகண்ட ராயன்பேட்டை சோளிங்கர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துர்காபிரசாத் (வயது 33) இவ ருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த துர்கா பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது.

    நாமக்கல்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று இரவு ஒரு காரில் அய்யப்ப பக்தர்கள் 4 பேர் புறப்பட்டனர்.

    விபத்து

    அந்த கார் இன்று அதிகாலை சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சென்டர் மீடியனில் கார் அதிவேகமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காருக்குள் இருந்த 4 பேருக்கும் அடிபட்டு ரத்த காயங்களுடன் கதறினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், நாமக்கல் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் தூங்கியதால் கார் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

    ×