என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்- ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிர் தப்பினர்
    X

    மாடு மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்- ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிர் தப்பினர்

    • விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.

    சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.

    மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.

    விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×