search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ben stokes"

    • உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
    • முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பென் ஸ்டோக்ஸ் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஜனவரி 2021-க்குப் பிறகு முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.  

    வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட இயலும் என்று லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார். #HardikPandya
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

    இதனால் அவரது ஆல்ரவுண்டர் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட முடியும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘சர்வதேச அளவில் உள்ள ஆல்ரவுண்டர்களில், பென் ஸ்டோக்ஸ்தான் முன்னணியில் இருக்கிறார். சமீப காலமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் சிலர் வருகிறார்கள். சிலர் போகிறார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்’’ என்றார்.
    இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டோல் இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபருடன் மோதிய விவகாரத்தில், கிரிக்கெட்டிற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.



    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. சாம் குர்ரான், 6. டாம் குர்ரான், 7. லியம் டவ்சன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. லியம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. பென் ஸ்டோக்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ், 15. ஒலி ஸ்டோன், 16. மார்க் வுட்.
    கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. #ECB #BenStokes
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதும், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் பென் ஸ்டோக்ஸ் சில தொடர்களில் விளையாடாத நிலை ஏற்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு வாலிபரை தாக்கியதில் சம்பந்தம் இல்லை என விடுவிக்கப்பட்டார். வாலிபர் தாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.



    நீதிமன்றம் விடுவித்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தனி அதிகாரம் படைத்த ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரனை நடத்திய, இருவரும் கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டிசம்பர் 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த இருக்கிறது.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் டி20 கிரிக்கெட் காலிறுதியில் விளையாடவில்லை. #BenStokes
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் துர்காம் அணிக்காக விளையாடி வருகிறார். டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் இன்று முடிவடைந்தது. அடுத்த டெஸ்ட் வருகிற 30-ந்தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.

    இதற்கு இன்னும் ஒருவாரம் உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்று டி20 போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஆட்டத்தில் துர்காம் அணி சசக்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அடுத்த டெஸ்டிற்கு தயாராக வேண்டியதால் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. ஆனால் லங்காஷைர் அணிக்காக ஜோஸ் பட்லர், ஜென்னிங்ஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG
    பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் பரபரப்பான சூழ்நிலையை அடைந்துள்ளது#ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பட்லர் ஒரு ரன் எடுத்திருக்கும்போது பும்ரா பந்தில் விக்கெட் கீப்பரிம் கேட்ச் கொடுத்தார். ரிஷப் பந்த் அதை பிடிக்க தவறினார்.

    அதன்பின் இருவரும் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நிலைத்து நின்று விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஜோடி சேர்ந்த இருவரும், தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    அதன்பின்னரும் சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் ஜோடியாக 150 ரன்களை கடந்தனர். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது. ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 152 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

    80 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 106 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 298 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ஜோடியால் இங்கிலாந்து இந்த டெஸ்டை உயிரோட்டமாக வைத்துள்ளது. இருவரும் இணைந்து 161 ரன்கள் சேர்த்துள்ளனர்.
    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    3-வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்காமல், போப்பிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸை சேர்க்க வேண்டும் என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆல் ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சதம் அடித்து இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியடைச் செய்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.



    நாளை டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். இதனால் ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரில் இருவருக்குத்தான் இடம் கொடுக்க முடியும். மூன்று பேரையும் சேர்க்க வேண்டுமென்றால் முன்னணி பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும்.

    இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்கக்கூடாது. பென் ஸ்டோக்ஸிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தால் பேட்ஸ்மேன் போப்பை நீக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேனும், கேப்டனும் ஆன நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    பிரிஸ்டோல் இரவு விடுதி முன் நடைபெற்ற அடிதடி வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என கோர்ட் தெரிவித்துள்ளது. #BenStokes
    வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் மாதம் 25-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பென் ஸ்டோக்ஸ் தனது சக வீரர் ஹேல்ஸ் உடன் இரவு விடுதிக்கு சென்றார்.

    பின்னர் நள்ளிரவு திரும்பும் வேளையில் விடுதி முன்பு வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பேன் ஸ்டோக்ஸை கைது செய்து பின்னர் விடுவித்தனர். அந்த வாலிபர், பென் ஸ்டோக்ஸ் தாக்கியதால் முகத்தில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்தார்.

    இந்த புகார் குறித்து பிரிஸ்டோல் கிரவுன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதனால் அவர் ஆஷஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார்.



    அந்த அடிதடி வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இதனால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் விளையாடவில்லை. அந்த நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

    இதனால் பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது.
    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.

    அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.
    இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND #BenStokes
    லண்டன்:

    இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்க தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை ஆல்-ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் 20 வயதான ஆலி போப் மற்றும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-

    அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர். #ENGvIND #BenStokes
    ×