search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளுஸ்னர்"

    வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட இயலும் என்று லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார். #HardikPandya
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

    இதனால் அவரது ஆல்ரவுண்டர் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட முடியும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘சர்வதேச அளவில் உள்ள ஆல்ரவுண்டர்களில், பென் ஸ்டோக்ஸ்தான் முன்னணியில் இருக்கிறார். சமீப காலமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் சிலர் வருகிறார்கள். சிலர் போகிறார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்’’ என்றார்.
    டெல்லி கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் குளுஸ்னர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #DDCA
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கேன்சி குளுஸ்னர். இவரை டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி ரஞ்சி அணி விளையாடும் ஒருநாள் தொடருக்கு ஆலோசகராக நியமித்துள்ளது.

    இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜத் ஷர்மா கூறுகையில் ‘‘குளுஸ்னர் டெல்லி அணியின் ஒருநாள் தொடருக்கான டெல்லி ரஞ்சி அணி மற்றும் உள்ளூர் டி20 தொடருக்கான அணியின் ஆலோசகராக செயல்படுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.



    விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபி ஆகிய தொடர்கள் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. உள்ளூர் டி20 தொடர் 2019 பிப்ரவரியில் தொடங்குகிறது. குளுஸ்னர் தலைமை பயிற்சியாளர் மற்றும் இதர பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

    46 வயதாகும் குளுஸ்னர் 171 ஒருநாள் போட்டியில் 2 சதம், 19 அரைசதங்களுடன் 3576 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 41.10 ஆகும். 192 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    ×