என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » third test
நீங்கள் தேடியது "third test"
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. #SAvPAK
ஜோகனஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி ஆம்லா, டி புருயின், மார்கிராமின் பொறுப்பான ஆட்டத்தால் 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் இமாம் உல் ஹக், பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமதின் நிதான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.
தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் டி காக் அசத்தால் சதம் மற்றும் அம்லாவின் அரை சதத்தால் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 381 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் அல் ஹக், ஷான் மசூதும் களமிறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது இமாம் அல் ஹக் 35 ரன்னில் வெளியேறினார். ஷான் மசூத் 37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசார் அலி 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இறங்கிய ஆசாத் ஷபிக் மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்
பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் அசாம் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின் 2 விக்கெட்டும், ஆலிவர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற போராடி வருகிறது. #SAvPAK
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
ஜோகனஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஆம்லா 41 ரன்னிலும், டி புருயின் 49 ரன்னிலும் அவுட்டானார். மார்கிராம் பொறுப்புடன் ஆடி 90 ரன்னில் வெளியேறினார்.
தேனீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கிய தென்ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆலிவர்
பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 41 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 50 ரன் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.
தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர். #SAvPAK
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
ஜோகனஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், எல்கரும் களமிறங்கினர். எல்கர் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஆம்லா நிதானமாக ஆடினார். அவர்41 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய டி புருயின் அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 90 ரன்னில் வெளியேறினார்.
தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் நிதானமாக ஆடினர். அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். ஹம்சா 41 ரன்னில் அவுட்டானதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. #SAvPAK
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. #ICC #TesrCricket #TestRanking #India
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத்தில் நியூசிலாந்தும், 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இடம்பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ICC #TesrCricket #TestRanking #India
ஒரே வருடத்தில் வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். #AUSvIND #JaspritBumrah
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் அசத்திய இவர்களின் சாதனை ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர். இதனால் ஒரே வருடத்தில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பட்டியலில் முதல் இடம் பிடிக்கப் போகும் இந்திய வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இந்தியாவிற்கான இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பும்ரா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் ஒரே ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #JaspritBumrah
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 3ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். டிராவிஸ் ஹெட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 72 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 18 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து லோகேஷ் ராகுல் 44 ரன்களில் அவுட்டானார். அப்போதுஅணியின் எண்ணிக்கை 76 ஆக இருந்தது.
அடுத்து இறங்கிய புஜாரா பொறுப்புடன் நிதானமாக விளையாடினார். கேப்டன் விராட் கோலி - புஜாரா ஜோடி 71 ரன்களை கடந்த நிலையில் விராட் கோலி 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #AUSvIND
நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ
அபுதாபி:
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார். அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvNZ #CaneWilliamson
அபுதாபி:
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜித் ராவலும், டாம் லத்தாமும் களமிறங்கினர்.
டாம் லத்தாம் 4 ரன்னிலும், ஜித் ராவல் 45 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.
மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் வெளியேறினார்.

ராஸ் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து, ஹென்ரி நிகோல்ஸ் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 20 ரன்னிலும், டிம் சவுத்தி 2 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னும், வில்லியம் சாமர்வில்லி 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். #PAKvNZ #CaneWilliamson
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
டிரண்ட் பிரிட்ஜ்:
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.
இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad