என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 229/7
  X

  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 229/7

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvNZ #CaneWilliamson
  அபுதாபி:

  பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

  இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜித் ராவலும், டாம் லத்தாமும் களமிறங்கினர்.

  டாம் லத்தாம் 4 ரன்னிலும், ஜித் ராவல் 45 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.

  மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் வெளியேறினார்.  ராஸ் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து, ஹென்ரி நிகோல்ஸ் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 20 ரன்னிலும், டிம் சவுத்தி 2 ரன்னிலும் வெளியேறினர்.

  இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னும், வில்லியம் சாமர்வில்லி 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

  பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். #PAKvNZ #CaneWilliamson
  Next Story
  ×