search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது டெஸ்ட்- அசார் அலி, ஆசாத் ஷபிக்கின் சதத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 348 ரன் குவிப்பு
    X

    3-வது டெஸ்ட்- அசார் அலி, ஆசாத் ஷபிக்கின் சதத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 348 ரன் குவிப்பு

    நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார்.  அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.



    இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348  ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து,  74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ
    Next Story
    ×