search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோகனஸ்பெர்க் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2ம் இன்னிங்சில் 153/3
    X

    ஜோகனஸ்பெர்க் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2ம் இன்னிங்சில் 153/3

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. #SAvPAK
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி ஆம்லா, டி புருயின், மார்கிராமின் பொறுப்பான ஆட்டத்தால் 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் இமாம் உல் ஹக், பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமதின் நிதான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் டி காக் அசத்தால் சதம் மற்றும் அம்லாவின் அரை சதத்தால் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 381 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் அல் ஹக், ஷான் மசூதும் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது இமாம் அல் ஹக் 35 ரன்னில் வெளியேறினார். ஷான் மசூத் 37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசார் அலி 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் இறங்கிய ஆசாத் ஷபிக் மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்
    பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் அசாம் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின் 2 விக்கெட்டும், ஆலிவர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற போராடி வருகிறது. #SAvPAK
    Next Story
    ×