search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்
    X

    டெஸ்ட் தொடர்- இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்

    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.

    அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.
    Next Story
    ×