என் மலர்

  செய்திகள்

  பென் ஸ்டோக்ஸ் லெவலை ஹர்திக் பாண்டியாவால் எட்ட இயலும்- குளுஸ்னர் சொல்கிறார்
  X

  பென் ஸ்டோக்ஸ் லெவலை ஹர்திக் பாண்டியாவால் எட்ட இயலும்- குளுஸ்னர் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட இயலும் என்று லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார். #HardikPandya
  இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

  இதனால் அவரது ஆல்ரவுண்டர் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட முடியும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘சர்வதேச அளவில் உள்ள ஆல்ரவுண்டர்களில், பென் ஸ்டோக்ஸ்தான் முன்னணியில் இருக்கிறார். சமீப காலமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் சிலர் வருகிறார்கள். சிலர் போகிறார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்’’ என்றார்.
  Next Story
  ×