search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ECB"

    வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தால்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியை இங்கிலாந்து மாற்றியுள்ளது. #ECB
    இங்கிலாந்தில் வசித்து வருபவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்செர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தி வரும் ஆர்செரை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 லட்சம் பவுண்டிற்கு வாங்கியது. இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியிலும் அவரை இடம்பெற வைக்க நிர்வாகம் விரும்பியது.

    ஆனால் 23 வயதாகும் ஆர்செர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படோஸில் பிறந்து வளர்ந்தவர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக விளையாடினார்.

    2015-ம் ஆண்டு சசக்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து வந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் 7 வருடங்கள் வசிக்க வேண்டும்.

    தற்போது இந்த விதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 7 வருடத்தை நான்கு வருடமாக மாற்றியுள்ளது. இந்த விதி அடுத்த ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



    இதுகுறித்து ஆர்செர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது நடக்கலாம் அல்லது நடக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குடும்பத்திற்கு முன் அறிமுகமாவதை நான் கட்டமாயம் விரும்புவேன்’’ என பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து ஆஷஸ், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் இங்கிலாந்து அணியில் ஆர்செர் இடம்பிடிக்கலாம்.
    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அறிமுகப்படுத்த இருக்கும் 100 பந்துகள் போட்டியின் உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகள் வெளியாகியுள்ளன. #100Balls
    எத்தனை நாட்கள் ஆனாலும் வெற்றி என்ற முடிவு கிடைக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்பின் நேரமின்மை காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்களாக குறைந்தது. டெஸ்ட் போட்டிக்குப்பிறகு ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமானது.

    அதன்பின் 20 ஓவர் கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளது.



    இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், விளையாட்டு விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்சும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும்.

    ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை (Bowling End) மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகள் வீசலாம். அதிகபட்சமாக 20 பந்துகள்தான் வீச முடியும்.
    கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. #ECB #BenStokes
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதும், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் பென் ஸ்டோக்ஸ் சில தொடர்களில் விளையாடாத நிலை ஏற்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு வாலிபரை தாக்கியதில் சம்பந்தம் இல்லை என விடுவிக்கப்பட்டார். வாலிபர் தாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.



    நீதிமன்றம் விடுவித்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தனி அதிகாரம் படைத்த ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரனை நடத்திய, இருவரும் கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டிசம்பர் 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த இருக்கிறது.
    100 பந்து போட்டியில் 12 வீரர்கள் பேட்டிங் செய்வார்கள் என்ற செய்தி முற்றிலும் பொய் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #100Ball #ECB
    டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வீரர்களின் உண்மையான திறமைகளை கண்டறிய முடியும் என்பதால், டெஸ்ட் கிரிக்கெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும் இரண்டு இன்னிங்சை முடித்தே தீர வேண்டும்.

    நாளடைவில் அது 6 நாட்களாக குறைந்து, தற்போது ஐந்து நாட்களாக உள்ளது. காலங்கள் மாறமாற கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்கள் மைதானம் சென்று போட்டியை காண விரும்பவில்லை. இதனால் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

    இது நாளடைவில் 20 ஓவர் போட்டியாகியுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே கடும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து போட்டியை அறிமுகப்படுத்த உள்ளது.



    இந்த போட்டியில் 12 வீரர்கள் விளையாடுவார்கள் என்பததுதான் உச்சக்கட்டம். தற்போதைய நிலையில் மாற்று வீரர் பீல்டிங் செய்யலாம். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. ஆனால் 100 பந்து பேட்டியில் பேட்டிங்கும் செய்யலாம், பந்து வீசலாம் என்பது நடைமுறைப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். ‘‘100 பந்து தொடருக்கான முழு வடிவத்தை இன்னும் உருவாக்கவில்லை. செப்டம்பர் மாதம் ஏராளமான பரிசோதனை போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர்தான் முடிவு செய்யப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.
    ×