என் மலர்

  செய்திகள்

  வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கான தகுதி அளவுகோலை குறைத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
  X

  வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கான தகுதி அளவுகோலை குறைத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தால்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியை இங்கிலாந்து மாற்றியுள்ளது. #ECB
  இங்கிலாந்தில் வசித்து வருபவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்செர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தி வரும் ஆர்செரை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 8 லட்சம் பவுண்டிற்கு வாங்கியது. இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியிலும் அவரை இடம்பெற வைக்க நிர்வாகம் விரும்பியது.

  ஆனால் 23 வயதாகும் ஆர்செர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படோஸில் பிறந்து வளர்ந்தவர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக விளையாடினார்.

  2015-ம் ஆண்டு சசக்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து வந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் 7 வருடங்கள் வசிக்க வேண்டும்.

  தற்போது இந்த விதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 7 வருடத்தை நான்கு வருடமாக மாற்றியுள்ளது. இந்த விதி அடுத்த ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.  இதுகுறித்து ஆர்செர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது நடக்கலாம் அல்லது நடக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குடும்பத்திற்கு முன் அறிமுகமாவதை நான் கட்டமாயம் விரும்புவேன்’’ என பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து ஆஷஸ், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் இங்கிலாந்து அணியில் ஆர்செர் இடம்பிடிக்கலாம்.
  Next Story
  ×