என் மலர்

  செய்திகள்

  ஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி
  X

  ஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் பரபரப்பான சூழ்நிலையை அடைந்துள்ளது#ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

  இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

  ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பட்லர் ஒரு ரன் எடுத்திருக்கும்போது பும்ரா பந்தில் விக்கெட் கீப்பரிம் கேட்ச் கொடுத்தார். ரிஷப் பந்த் அதை பிடிக்க தவறினார்.

  அதன்பின் இருவரும் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நிலைத்து நின்று விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஜோடி சேர்ந்த இருவரும், தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.  அதன்பின்னரும் சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் ஜோடியாக 150 ரன்களை கடந்தனர். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது. ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 152 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

  80 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 106 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 298 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ஜோடியால் இங்கிலாந்து இந்த டெஸ்டை உயிரோட்டமாக வைத்துள்ளது. இருவரும் இணைந்து 161 ரன்கள் சேர்த்துள்ளனர்.
  Next Story
  ×