என் மலர்

  செய்திகள்

  முழங்கால் காயத்தால் டி20 தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை
  X

  முழங்கால் காயத்தால் டி20 தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் டி20 கிரிக்கெட் காலிறுதியில் விளையாடவில்லை. #BenStokes
  இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் துர்காம் அணிக்காக விளையாடி வருகிறார். டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் இன்று முடிவடைந்தது. அடுத்த டெஸ்ட் வருகிற 30-ந்தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.

  இதற்கு இன்னும் ஒருவாரம் உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்று டி20 போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஆட்டத்தில் துர்காம் அணி சசக்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அடுத்த டெஸ்டிற்கு தயாராக வேண்டியதால் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. ஆனால் லங்காஷைர் அணிக்காக ஜோஸ் பட்லர், ஜென்னிங்ஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×