search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Camp"

    • மதுரையில் பெண்கள் பாலியல் தொல்லை சட்ட விழிப்புணர்வு முகாம் பெட்கிராட் சார்பில் நடந்தது.
    • நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் பெட்கிராட் இணைந்து "வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்" குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தையல் பயிற்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமையில் நடந்தது.

    பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, சாராள்ரூபி முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிருஷ்ண வேணி வரவேற்று பேசினார்.

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுபட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவதி, உமா சங்கர் ஆகியோர் நடை முறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு சட்டப்படி நடவடிக்கையை எப்படி நாம் கையாள வேண்டும் என்று சட்டம் பற்றி பேசினர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் வெள்ளைப் பாண்டி இலவச பயிற்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு சான்றிதழ்கள், பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி முடித்த பின்பு வேலைக்கு சென்று குடும்பத் தில் ஏற்படும் பொருளாதார சுமையை குறைத்து தொழில் முனைேவாராக மாற வேண்டும் என பேசினார். துணைத்தலைவர் மார்டின் லூதர்கிங் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன், இந்திரா, ரம்யா, டயானா ஜான்சிராணி, சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
    • முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.

    திசையன்வினை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.

    முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    காங்கயம் :

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொறியியல் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 600 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதில் பல ஊர்களில் நோய் தாக்குதல் தென்படுகிறது. திருப்பத்தூர் வட்டாரத்துக்குட்பட்ட பெருமாபட்டு, இருனாப்பட்டுகிரா மங்களிலும், கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட மட்றப்பள்ளியிலும் சிவப்பு கூண் வண்டு தாக்கப்பட்ட தென்னைகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில், தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் திலகம், வேளாண் உதவி தரக்கட்டுபாடு அப்துல்ரகுமான், கந்திலி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராகினி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறை பற்றி மாவட்ட மலேரியா அலுவலர் பேசினார்.

    பரமக்குடி

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ஹரிகரன் வரவேற்றார். மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களையும், கொசுப்பழுக்களையும் ஒழிக்கும் முறை பற்றியும், மலேரியா காய்ச்சலுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை பற்றியும் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் பேசினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமையில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மருத்துவ அலுவலர் மாலினி, சுகாதாரத்துறை துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகமது நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தென்னை நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னையானது சுமார் 8250 எக்டர் பரப்பளவில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் வட்டாரங்களில் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய்களான காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலை புழு, சிவப்பு கூன் வண்டு, முரணை சிலந்தி, தஞ்சாவூர் வாடல் நோய், இலை கருகல் நோய் மற்றும் குருத்தழுகல் நோய் ஆகியவை அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது தென்னையில் மேற்கூறிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றாங்கால் பண்ணையில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை(27-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இந்த முகாமை வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து நடத்துகின்றனர். இதில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் குறித்த கண்காட்சி, தொழில்நுட்பங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், தொழில்நுட்ப உரை, செயல் விளக்கங்கள், விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
    • கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி பஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து சுகாதார விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

    அதனைதொடா்ந்து மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் கட்டி இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. பின்னர் கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு ரத வீதியில் கட்டிடக்கழிவுகள் இருக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் திலீபன்ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.

    சமூக நலத்துறை அலுவலர் ஜாஸ்மின், கண் மருத்துவர் அழகர்ராஜ், வட்டாட்சியர் ரங்கசாமி, கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேசினர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூடலூர் நகராட்சி 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, மேலாளர் ஜெயந்தி ,சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அங்குள்ள கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. பின் அருகில் உள்ள ஆலமரம் பகுதி, காக்கைக்கு அன்னம் இடும் பகுதிகளில் குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    • கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
    • கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எலவமலை பஞ்சாயத்து சென்னா நாயக்கனார் பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம் புகையிலை மற்றும் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தது.

    புகையிலை பயன்பா ட்டின் தீமைகள், புற்று நோய் பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், போதை பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள், கோடை வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்,

    மாரடைப்பு நோய் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு முறைகள், கோடை கால உணவு முறை, கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயன் பெற யோசனை தெரிவித்தனர். தற்போதைய நிலையில் கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் டாக்டர்.கலைச்செல்வி,

    சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மூர்த்தி, குமார், ராஜா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வளாக குறைதீர் அமைப்பு மாணவர் ஆலோசனை அமைப்பு பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அருபாதேவி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசுகையில், போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் நேர் வழியில் செயல்படுவது குறித்தும் எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவமணி, ராஜேஸ்வரி, குடும்ப ஆலோசர் ஜோஸ்மின், குழந்தைகள் நல ஆர்வலர் முனியம்மாள், சமூக ஆர்வலர் ஜானகி, மருத்துவ ஆலோசகர் திருசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மாரி மகேஸ்வரி நன்றி கூறினார். இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம் ஊராட்சி மன்றத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    கபிஸ்தலம்:

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கபிஸ்தலம் கிராமத்தில் நடைபெற்றது.

    முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி கலந்து கொண்டு பேசுகையில்

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே தனக்கு ஏற்பட்டுள்ள குற்றம் தொடர்பான பிரச்சனைகளை கூறிவருகிறார்கள். எனவே பெற்றோர்கள் அன்புடன் அதிக நேரத்தை குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் தயங்காமல் நீதிமன்றத்தை நாடலாம். ஏழை பணக்காரர்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.

    வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத பட்சத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞரை நியமித்து நீதி பெறலாம். இதற்கான வழக்கறிஞர் ஊதியத்தை அரசே வழங்குகிறது. குடும்ப பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையத்தின் மூலம் நீதிமன்றம் முறை அல்லாமல் மாற்று முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்று கூறினார்.

    முகாமில் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    ×