search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி மன்ற அலுவலகம்"

    • ஊராட்சி மன்ற அலுவலகத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ முற்றுகையிட்டனர்.
    • உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கியுள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. அய்யப்பனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனை அடுத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பல முறை நகராட்சி அதிகாரிகளிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நூலகத் தில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையிலான நிர்வாகிகள் சந்தை திடலில் இருந்து நடைபயணமாக பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    காங்கயம் :

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொறியியல் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு வரி கட்டுவதற்காக சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்தத் தரப்பினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.

    அவினாசி :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    ×