search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Council Office"

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    காங்கயம் :

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொறியியல் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு வரி கட்டுவதற்காக சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்தத் தரப்பினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.
    • பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் வரவேற்றார். இதில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி வாய்ந்த 21 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 6 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    • 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.

    அவினாசி :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ரூ.19.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழக அரசு கொறடா கோவி செழியன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் மணிமொழி தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், வட்டாட்சியர் மதுசூதனன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு, ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:- தமிழக முதல்வர் முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறந்து வைக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிக அளவில் விளைச்சல் இருக்கும். டெல்டா மாவட்டத்தில் 85 சதவீத தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுள்ளது.

    கோடை சாகுபடியான எள், பருத்தி, உளுந்து போன்ற பயிர்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×