பல்லடம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு வரி கட்டுவதற்காக சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்தத் தரப்பினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com