என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
  X
  புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

  தூர்வாரும் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது - அமைச்சர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
  பாபநாசம்:

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ரூ.19.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழக அரசு கொறடா கோவி செழியன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் மணிமொழி தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், வட்டாட்சியர் மதுசூதனன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு, ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  அப்போது அமைச்சர் கூறியதாவது:- தமிழக முதல்வர் முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறந்து வைக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிக அளவில் விளைச்சல் இருக்கும். டெல்டா மாவட்டத்தில் 85 சதவீத தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுள்ளது.

  கோடை சாகுபடியான எள், பருத்தி, உளுந்து போன்ற பயிர்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×