படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.
விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

காங்கயம் :

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொறியியல் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com