என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய கொடி விற்பனை தொடங்கி வைக்கப்பட்ட காட்சி.
தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை மையம் துவக்கம்
- 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
- தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.
அவினாசி :
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story