search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை மையம்"

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • 5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்து 200 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்கப்பட்டு வரும் நீரா மின்னணு வர்த்தக முறையிலும் சமீபத்தில் விற்பனையைத் துவக்கியது. சமீபத்தில்5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

    இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:- நீரா பானத்தை சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். இதற்காகஅமெரிக்காவில் உள்ள டெனிசி மாகாணம் நாஸ்வில் பகுதியில் நீரா விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது. ரீஜென்ட் நார்த் அமெரிக்கா என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இம்மையத்துக்கு கோவை மாவட்டம் அன்னூரை பூர்வீகமாக கொண்ட கதிர் குருசாமி வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். விற்பனை மைய துவக்க விழாவில் அட்லாண்டா மாநிலத்தின் இந்திய தூதர் சுவாதி நீரா வை அறிமுகப்படுத்த செனட் தலைவர் ஜேக் ஜான்சன் பெற்றுக் கொண்டார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் பங்கேற்றார்.அமெரிக்க சந்தையின் ஈர்ப்பைப் பொறுத்து மாதம் 2 லட்சம் டெட்ரா பேக்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார். 

    • விற்பனை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

    தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்."

    • 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.

    அவினாசி :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    ×