search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neera"

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • 5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்து 200 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்கப்பட்டு வரும் நீரா மின்னணு வர்த்தக முறையிலும் சமீபத்தில் விற்பனையைத் துவக்கியது. சமீபத்தில்5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

    இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:- நீரா பானத்தை சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். இதற்காகஅமெரிக்காவில் உள்ள டெனிசி மாகாணம் நாஸ்வில் பகுதியில் நீரா விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது. ரீஜென்ட் நார்த் அமெரிக்கா என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இம்மையத்துக்கு கோவை மாவட்டம் அன்னூரை பூர்வீகமாக கொண்ட கதிர் குருசாமி வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். விற்பனை மைய துவக்க விழாவில் அட்லாண்டா மாநிலத்தின் இந்திய தூதர் சுவாதி நீரா வை அறிமுகப்படுத்த செனட் தலைவர் ஜேக் ஜான்சன் பெற்றுக் கொண்டார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் பங்கேற்றார்.அமெரிக்க சந்தையின் ஈர்ப்பைப் பொறுத்து மாதம் 2 லட்சம் டெட்ரா பேக்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார். 

    ×