search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Camp"

    • வனத்துறை சார்பில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனவிலங்கு, மனித மோதல் தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வனச்சர அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணதாசன், வனச்சரக அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராம்கோ குழுமத்தின் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் ஏற்பாட்டில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரின் அறிவுறுத்தலில் செயலர் நீதிபதி இருதய ராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பழங்குடியின சாதி சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006-ன் படி இண்டு நார் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    பின்னர் நீதிபதி இருதய ராணி கூறியதாவது:-

    'ஒவ்வொரு பழங்குடியின கிராமமாக சென்று அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அழைத்து வருகிற 24-ந் தேதி கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோ சிக்கப்படும். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுப்பையா, மூர்த்தி மற்றும் அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
    • சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகளூர் ஊராட்சியில் கால்நடை பரா மரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2-ம் கட்ட சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    முகாமில் கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், ஆடுகளுக்கு துள்ளுமாரி தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளும் கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே உள்ள அம்பலவயலில் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது மஞ்சல்மூலா, பூலக்குன்று போலீஸ் சோதனை சாவடி வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. அப்போது சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள். இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார்.
    • போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் முகாம் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.

    துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சியம்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வக்கீல்கள் தம்பி பிரபாகரன், எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்ச ரகத்தில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும் வனத்தை பாதுகாப்பது பற்றியும் கோசங்கள் எழுப்பியவாரு சென்றனர்.

    பின்னர் பள்ளி வவள காத்தில் விழிப்பு ணர்வு முகாம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெ ற்றது.

    இதில் ஒய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் சதாசிவம், கிருஷ்ணகுமார், நந்தகுமார், கவுசல்யா, ஊராட்சி தலைவர் சித்ரா சுப்பிர மணியம், வனச்சரக அலு வலர் பாண்டிராஜ், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மணி கண்டன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை, காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மருதம் ரெஸிடன்சியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வங்கி சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், சக்தி மகளிர் சுய உதவி குழுவினர், சிறப்பான வாடிக்கையாளர் மையம் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    மேலும் எஸ்டேட் வங்கியின் மூலம் கடனுதவிப் பெறும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை மற்றும் காசோலைகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    இம்முகாமில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார துணைப் பொது மேலாளர் ஆபிரகாம் செல்வின், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரியம்மாள், ஸ்டேட் வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் ஷர்மிளா, மாவட்ட மேலா ளர் சுந்தரராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன், வங்கி அலுவ லர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.
    • மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய தேர்வு ஆணையத்தின் போட்டி தேர்வுக்கு 15 ஆண்டாக புதுவை கிளை பயிற்சி அளிக்கிறது. இந்த ஆண்டு பிளஸ் 2, கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.

    இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பயிற்சி விபரம் விளக்கம் பெற புதுவை ஏவேஷ் வீதியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவன கிளையில் வரும் 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 0413 2222354, 9345009639 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மதகடிப்பட்டு உழவர் உதவியகம் மூலம் பி.ஸ்.பாளையம் கிராமத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    பி.ஸ்.பாளையம், வாதானூர், சண்ணியாசிக்குப்பம், கலிஜித்தால்குப்பம், சிலுக்காரிப்பாளையம், குச்சிப்பாளையம், மதகடிப்பட்டு, மதகடிப்பட்டு பாளையம் கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் நடராஜன், விவசாயிகளை வரவேற்று, பயிர் காப்பீடு அவசியம் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல், சொர்ணாவாரி பருவ நெல் பயிர் காப்பீடு, வாழை பயிர் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார். பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை உதவிவேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஸ்வரி, ஆத்மா மேலாளர் சிரஞ்சீவி, செயல் விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காளசமுத்திரம் அரசு பள்ளியில் நடந்தது
    • தொற்று நோய்கள் குறித்து விளக்கி பேசினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மலேரியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் தமிழரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.

    ×