search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை சுகாதார"

    • கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
    • சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகளூர் ஊராட்சியில் கால்நடை பரா மரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2-ம் கட்ட சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    முகாமில் கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், ஆடுகளுக்கு துள்ளுமாரி தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளும் கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×