search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvPAK"

    • மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
    • கவாஜா 41 ரன்னிலும், லபுசேன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தொடக்க ஜோடி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

    குறிப்பாக டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 25 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும், காவாஜா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் டேவிட் வார்னர் 125 பந்தில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இவரது சதத்தால் ஆஸ்திரேலிய தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

    தற்போது ஆஸ்திரேலியா 54 ஓவரில் 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்.
    • நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, அணிந்திருந்த 'ஷூ'வில் சுதந்திரம் அனைவருக்குமானது. எல்லா உயிர்களும் சமமானது என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர் அந்த வாசகத்தை வைத்துள்ளார். ஐ.சி.சி. விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்க கூடாது.

    இதையடுத்து அந்த வாசகம் இடம் பெற்ற ஷூவை கவாஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியக்கூடாது என்று ஐ.சி.சி. தெரிவித்தது.

    இதுகுறித்து "கவாஜா கூறும்போது, ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, "அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும், ஆனால் ஐசிசி எனக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருக்கும்.

    சில சமயங்களில் விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கும். நான் சொன்னதில் நிற்கிறேன். நான் என்றென்றும் நிற்பேன். முடிந்தவரை செய்ய முயற்சிப்பேன். ஏற்கனவே ஐசிசி அனுமதித்த முன்னுதாரணங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கையை நியாயமற்றது" என்றார்.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
    • கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் மாட் ரென்ஷா ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்தார். இந்த சம்பவம் 78-வது ஓவரில் அரங்கேறியது. இந்த ஓவரை அப்ரார் அகமது வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ரென்ஷா பவுண்டரிக்கு விரட்டினார். இதனை தடுத்த பாகிஸ்தான் கேப்டன் பந்து வீச்சாளர் பக்கம் வீசினார். அதனை வாங்கிய பாபர் அசாம் கீப்பர் பக்கம் உள்ள ஸ்டெம்ப் மீது எரிந்தார். கீப்பர் நின்ற சப்ராஸ் அகமது அதனை பிடிக்காமல் விட்டார். அவர் பின்னாடி இருந்த வீரரும் அதனை பிடிக்காததால் பந்து பவுண்டரி சென்றது. 3 ரன்கள் ஓடி எடுத்த நிலையில் பவுண்டரியை சேர்த்து ஆக மொத்தம் ஒரே பந்தில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இந்த வீடியோ வைரலானதையடுத்து பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் ஸ்டைலில் பீல்டிங் செய்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். 

    • முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
    • அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.

    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. 

    இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது இனவெறி சர்ச்சை வெடித்தது. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோர் போர்டில் பாகிஸ்தானுக்கு பதிலாக பாகி (பி.ஏ.கே.ஐ.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தனர். 'பாகி' என்பது பாகிஸ்தான் அல்லது தெற்காசியாவில் பிறந்தவரை குறிப்பிடும் இழிசொல்லாக கருதப்படுகிறது.

    இது சமூக வலைதளத்தில் வைரலானதும் அந்த வார்த்தை திருத்திக் கொள்ளப்பட்டதுடன், தவறுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஏமாற்றமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது. தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

    அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க ஆஸ்திரேலியா வாரியம் அல்லது பாகிஸ்தான் வாரியம் சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லாரியிலிருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துக் கொண்டு சென்றனர்.

    2023 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டவர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ், வேட் ஜோடி81 ரன் ஜோடி சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தது.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கவீரர் பாபர் அசாம் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பகர் சமன் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    ஆஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2  விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 5 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 7 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். 
     
    ஆஸ்திரேலியா 96 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ரன்களை விரைவாக கடந்தது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 40 ரன்னும், வேட் 17பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் அணிகள் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கின்றன. இரண்டு அணிகளும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகின்றன. #AUSvPAK #AUSvNZ
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2019-2020-ம் ஆண்டுக்கான போட்டி அட்டவனையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர்-டிசம்பர்  மாதம் பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டிசம்பர்-ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 12-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இது பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. அதன்பின் மெல்போர்னில் 2-வது டெஸ்ட் பாக்சிங் டே அன்று தொடங்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் புது வருடம் டெஸ்டாக நடக்கிறது.



    1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பாக்சிங் டெஸ்டில் மோதியது. அதன்பின் 32 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாக்சிங் டே டெஸ்டில் விளையாட இருக்கிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS
    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    பகர் சமான் (91), சோயிப் மாலிக் (43) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.



    1990-ம் ஆண்டு சார்ஜாவில் ஆஸ்ட்ரால் - ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, வங்காள சேதம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அதன்பின் தற்போதுதான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் வைடு பந்தில் டக்அவுட் ஆகி பாகிஸ்தான் அறிமுக வீரர் மோசமான சாதனையை படைத்துள்ளார். #PAKvAUS
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவல் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக பகர் சமான் மற்றும் சஹிப்சதா பர்ஹான் ஆகியோர் களம் இறங்கினார்கள். பர்ஹானுக்கு இது அறிமுக போட்டியாகும். இறுதிப் போட்டியில் அறிமுகமானதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த பர்ஹானுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தை பர்ஹான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய பந்தில் பர்ஹான் ஸ்டம்பிங் ஆகி டக்அவுட் ஆனார். வைடு பந்து என்பது லீகல் பந்தாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதால் பந்தை சந்தக்காமலேயே அவுட்டானதாக கருதப்பட்டது.



    இதன்மூலம் பந்தை சந்திக்காமலேயே அறிமுக போட்டியில் அவுட்டான 3-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்லே நோஃப்கே (2007) நியூசிலாந்திற்கு எதிராக ரன்அவுட் ஆகியுள்ளார். 2015-ல் வங்காள தேச வீரர் சவுமியா சர்கார் பாகிஸ்தானுக்கு எதிராக ரன்அவுட் ஆகியுள்ளார். தற்போது பர்ஹான் ஸ்டம்பிங் ஆகியுள்ளார்.
    பகர் சமான், சோயிப் மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆர்கி ஷார்ட் (76), ஆரோன் பிஞ்ச் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பகர் சமான், சஹிப்சதா பர்ஹான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    2-வது பந்தை மேக்ஸ்வெல் வைடாக வீசினார். இதில் அறிமுக வீரரான பர்ஹான் ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த ஹுசைன் தலாத் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் முதல் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து திணறியது பாகிஸ்தான். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அஹமது அதிரடியாக விளையாடி 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் அனுபவ வீரர் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பகர் சமான் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    30 பந்தில் அரைசதம் அடித்த பகர் சமான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சோயிப் மாலிக் 37 பந்தில் 43 ரன்களும், ஆசிஃப் அலி 11 பந்தில் 17 ரன்கள் விளாச பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பகர் சமான் தட்டிச் சென்றார்.
    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvPAK
    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது.



    இந்த ஜோடி 9.5 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (5), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (12) கேரி (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் ஸ்கோர் உயர்வில் சற்று மந்தநிலை ஏற்பட்டது. மற்றொரு தொடக்க வீரரான ஆர்கி ஷார்ட் 53 பந்தில் 76 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 160 ரன்களை தாண்டிச் சென்றது.

    டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 19 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 117 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AUSvPAK #Stanlake
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஹபீஸ், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஹபீஸ் 3 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹுசைன் தலத் 10 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பகர் சமான் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த சர்பராஸ் அஹமது 4 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த நான்கு விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேன்லேக் வீழ்த்தினார்.



    ஸ்டேன்லேக் 4 ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த சோயிப் மாலிக் 13 ரன்னில் ரன்அவுட் ஆனார். 6-வது வீரர் ஆசிஃப் அலி 22 ரன்னும், 7-வது வீரர் சதாப் கான் 29 ரன்னும், 8-வது வீரர் பஹீம் அஷ்ரப் 21 ரன்களும் அடிக்க 19.5 ஓவர் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 116 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    ஸ்டேன்லேக் 4 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
    ×