search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andrew Tye"

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 117 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AUSvPAK #Stanlake
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஹபீஸ், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஹபீஸ் 3 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹுசைன் தலத் 10 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பகர் சமான் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த சர்பராஸ் அஹமது 4 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த நான்கு விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேன்லேக் வீழ்த்தினார்.



    ஸ்டேன்லேக் 4 ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த சோயிப் மாலிக் 13 ரன்னில் ரன்அவுட் ஆனார். 6-வது வீரர் ஆசிஃப் அலி 22 ரன்னும், 7-வது வீரர் சதாப் கான் 29 ரன்னும், 8-வது வீரர் பஹீம் அஷ்ரப் 21 ரன்களும் அடிக்க 19.5 ஓவர் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 116 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    ஸ்டேன்லேக் 4 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
    கேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP
    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் லோகேஷ் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 652 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக இரண்டு மூன்று ஆட்டங்களில் கடைசி வரை ஒரு நபராக நின்று அணியின் வெற்றிக்கு போராடுகிறார். மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அணி தோல்வியை சந்திக்கிறது. இதேபோல் பந்து வீச்சில் அன்ட்ரிவ் டை, முஜீப் உர் ரஹ்மான் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 94 ரன்களும், அன்ட்ரிவ் டை 4 விக்கெட் வீழ்த்தியும் பெற்ற முடியாமல் போனது. இதனால், ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்றவர்கள் சரியாக விலையாடவில்லை என்று அன்ட்ரிவ் டை வேதனை அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அன்ட்ரிவ் டை கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் எடுத்தது ஒரு காரணம். நாங்கள் சிறப்பாக சேஸிங் செய்து வந்தோம். ஆனால் கடைசியில் வெற்றி பெற முடியாமல் போனது.



    நான் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது பெரிய விஷயம் கிடையாது. மற்ற யாரும் உங்களுடன் இணைந்து பந்து வீசவில்லை என்றால், அது ஒட்டுமொத்த அணி முயற்சி கிடையாது. இதனால்தான் நாங்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் திணறி வருகிறோம்.

    கேஎல் ராகுலுடன் நிலைத்து நின்ற விளையாடுவதற்கும், என்னுடன் மற்றும் முஜீப் உடன் இணையாக யாரும் பந்து வீசவில்லை. மும்பை அவர்களது சிறப்பான பீல்டிங்கால் வெற்றி பெற்றார்கள். நெருக்கமான ஆட்டத்தில் ஒன்றிரண்டு பவுண்டரிகளை தடுத்துவிடுகிறார்கள். அதேபோல் ஒன்றிரண்டு டாட் பந்து வீசுவதால் ஐந்து போன்ற ரன்களில் தோற்பது இது முக்கியமானதாக கருதப்படுகிறது’’ என்றார்.
    ×