search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Day Night Test"

    • 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், நசேர், போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது.

    தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும், ஆண்டர்சன் பிலிப் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    ஆனால் பாலோ-ஆன் வழங்காமல் தனது 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை அடுத்து இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது. டிவோன் தாமஸ் 8 ரன்களுடனும், ஜாசன் ஹோல்டர் 8 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஹோல்டர் 11ரன்னிலும், தாமஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த வீரர்கள் சில்வா 15 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 13 ரன்னிலும், அல்சாரி ஜோசப் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 40.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 419 ரன்கல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், நசேர், போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் அணிகள் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கின்றன. இரண்டு அணிகளும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகின்றன. #AUSvPAK #AUSvNZ
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2019-2020-ம் ஆண்டுக்கான போட்டி அட்டவனையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர்-டிசம்பர்  மாதம் பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டிசம்பர்-ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 12-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இது பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. அதன்பின் மெல்போர்னில் 2-வது டெஸ்ட் பாக்சிங் டே அன்று தொடங்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் புது வருடம் டெஸ்டாக நடக்கிறது.



    1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பாக்சிங் டெஸ்டில் மோதியது. அதன்பின் 32 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாக்சிங் டே டெஸ்டில் விளையாட இருக்கிறது.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

    முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.



    அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

    ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.
    எதிர்கால கிரிக்கெட்டான பகல்-இரவு டெஸ்டிலவ் இந்தியாவல் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். #PinkBallTest
    20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமான பின்பு 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை அறிந்து கொள்வதற்கு டெஸட் கிரிக்கெட்டுதான் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. அதேவேளையில் ரசிகர்கள் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியை உட்கார்ந்து பார்ப்பதற்கு விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து விடக்கூடாது என்பதில் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனமாக இருக்கின்றன.

    மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிங்க்-பந்தில் விளையாடப்படும் டே-நைட் டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிக அளவில் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்தியா, வங்காள தேச அணிகளைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் டே-நைட் டெஸ்டில் விளையாடிவிட்டன. இந்தியா இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது டே-நைட் டெஸ்டில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.

    ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டிற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்தியா தயாராவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டே-நைட் டெஸ்டிற்கு ஆதரவாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக சவுரவ் கங்குலி, இந்திய அணியால் டே-நைட் டெஸ்டில் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டே-நைட் டெஸ்ட் போட்டிதான் முன்னோக்கிச் செல்லும் வழி. ஒவ்வொரு நாடும் டே-நைட் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இந்தியா சற்று ஒத்திவைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான நீண்ட கால வரையறை டே-நைட் போட்டிதான்.

    இந்தியா சிறந்த அணியாக உள்ளது. அவர்களால் டே-நைட் டெஸ்டை வெற்றி பெற முடியும். டே-நைட் டெஸ்டில் பந்து மட்டும்தான் மாறுபட்டவை. மற்றபடி எந்த மாற்றத்தையும் நான் அதில் பார்க்கவில்லை. இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியும்’’ என்றார்.
    ×