search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பகல்-இரவு டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
    X

    பகல்-இரவு டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

    • 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், நசேர், போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது.

    தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும், ஆண்டர்சன் பிலிப் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    ஆனால் பாலோ-ஆன் வழங்காமல் தனது 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை அடுத்து இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது. டிவோன் தாமஸ் 8 ரன்களுடனும், ஜாசன் ஹோல்டர் 8 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஹோல்டர் 11ரன்னிலும், தாமஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த வீரர்கள் சில்வா 15 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 13 ரன்னிலும், அல்சாரி ஜோசப் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 40.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 419 ரன்கல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், நசேர், போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×