search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS
    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    பகர் சமான் (91), சோயிப் மாலிக் (43) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.



    1990-ம் ஆண்டு சார்ஜாவில் ஆஸ்ட்ரால் - ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, வங்காள சேதம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அதன்பின் தற்போதுதான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×