search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assault"

    • மீனவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.

    தொண்டி

    தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம்- கண்கொள்ளான் கடலோர கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்(40). மீனவ சங்க செயலாளரான இவர் சம்பவத்தன்று நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    அப்போது மகாசக்திபுரத்தை சேர்ந்த சில மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி முத்துசெல்வத்தை தாக்கியதாக தெரிகிறது. படுகாயமடைந்த அவர் திருவாடனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தால் 2 மீனவ கிராமங்கள் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.

    • 2 வாலிபர்கள் தாக்கினார்கள்.
    • அசோகனை போலீசார் தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் அருகே முறுக்கேரியில் வைத்திய நாதன் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த மாதம் 26-ந்தேதி கந்தாடு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாக்கினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 28), அசோகன் (26) ஆகியோர் சம்பவத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதில் சம்பவத்தன்றே ஜீவாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அரக்கோணத்தை சேர்ந்த அசோகனை போலீ சார் தேடி வந்தனர்.

    இவர் நேற்று நண்பகலில் பிரம்மதேசம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றதை போலீசார் பார்த்தனர். அவரை பின்தொடர்ந்த போலீசார், மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து அசோகனை கைது செய்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அசோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
    • நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதில் பாண்டியன் மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் உள்ள முனியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதில் நாதன்(வயது25) என்பவரின் குடும்பத்தினர் காவடி, முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களுக்கு முன்பு நாதன் கூச்சலிட்டபடி ஆடி பாடிக்கொண்டு வந்த தாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சகோத ரர்களான பாலசுப்பிர மணியன்(48), தர்மர்(49) ஆகியோர் நாதனை கூச்சலி டாமல் செல்லும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் முளைப்பாரி வேறு தெருவில் வந்தபோது பாலசுப்பிரமணியன் மற்றும் தர்மர், நாதனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாதன் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(50). இவர் தந்தை தனக்கு அளித்த பூர்விக சொத்தை சகோதரர் மாரிமுத்துவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சொத்தை மற்றொரு சகோதரி ஜான கிக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த சொத்து தொடர்பாக காளியம்மாள் வட்டாட்சியர் அலுவல கத்தில் வில்லங்க புகார் பதிவு செய்தார்.

    இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக காளியம் மாள் வந்தார். அப்போது ஜானகி, தனது கணவர் முப்பிடாதியுடன் சேர்ந்து காளியம்மாளை தாக்கினர். இதில் காயமடைந்த காளி யம்மாள், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதுகுறித்து காளியம் மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    • நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
    • ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.

    இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
    • 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்  .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்   ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்  இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ்  குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.

    குப்பாண்டபாளையம்  பஸ் நிறுத்தம் அருகே  ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம்  (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.

     பின்னர் சுந்தரம்  அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். 

    இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை. 

    இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம்  அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
    ×