ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

ஓட்டல் உரிமையாளரை தாக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

மதுரை

மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com