search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games"

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
    ஜகார்த்தா:


    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தைப் பிரிவுகளுக்கான இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி, தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள்பெற்றதால் போட்டி டை ஆனது. இதையடுத்து ஷூட் ஆப் முறையில் இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கொரிய அணி, வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சவுகான் ரஜத், சைனி அமான், வர்மா அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



    இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. #AsianGames2018 #IndianArcheryWomen
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி  228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



    இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryWomen
    ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்தியா அணி இன்று தாய்லாந்தை எதிர் கொள்கிறது. இந்திய அணி 4-வது வெற்றியை பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. #AsianGames2018
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவையும், 2-வது ஆட்டத்தில் 21-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், 3-வது போட்டியில் 4-1 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தியது. இதன்மூலம் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. கோல் மழை பொழிவதால் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்தோனேசியாவை 17-0 என்ற கணக்கிலும், ஆங்காங்கை 26-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 8-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 5-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையை நாளை சந்திக்கிறது. 5-வது வெற்றி வாய்ப்பு இந்தியா அணிக்கு இருக்கிறது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018 #PVSindhu
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் போராடித் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் ஆசிய போட்டியை நிறைவு செய்தார்.

    இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பிவி சிந்து, முதல் செட்டை 21-17 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த அகானே யமகுச்சி 2வது செட்டை வசமாக்கினார்.



    அதன்பின்னர் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடும் சவாலுக்கு மத்தியிலும் முன்னேறிய பிவி சிந்து, அந்த செட்டை 21-10 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 21-17, 15-21, 21-10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற பிவி சிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வெள்ளிப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.

    தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பிவி சிந்து, சீன வீராங்கனை தாய் டி சுயிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #AsianGames2018 #PVSindhu
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SainaNehwal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் முதல் செட்டை பிவி சிந்து கைப்பற்றியிருப்பதால், போட்டியின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். #AsianGames2018 #SainaNehwal
    ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ்சோப்ரா ஈட்டு எறிதலில் தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #Asiangames #NeerajChopra
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அனஸ்யக்யா ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

    9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈட்டி எறியும் பந்தயத்தில் நீரஜ்சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    24 வயதான அவர் உலக ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த்தில் தங்கம் வென்று இருக்கிறார். இதனால் முதல் முறையாக பங்கேற்கும் ஆசிய விளையாட்டிலும் நீரஜ்சோப்ரா தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 87.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக உள்ளது.

    நீரஜ்குமார் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு இந்திய வீரரான சிவபால்சிங்கும் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இன்று நடைபெறும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீரர்கள் தருண் அய்யாசாமி, சந்தோஷ்குமார் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அனு ராகவன், ஜானா முர்மு ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இது தவிர 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேசில் சுதாசிங், சங்கர்லால் சுவாமி ஆகியோரும் நீளம் தாண்டுதலில் நீனா, ஜேம்ஸ் நயனா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் சேட்டனும் கலந்து கொள்கிறார்கள்.

    800 மீட்டர் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஜின்சன் ஜான்சன், மனஜித்சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள். #Asiangames #NeerajChopra
    ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். #AsianGames #LakshmananGovindan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஆசிய விளையாட்டு போட்டி நிர்வாகத்தினர் கூறுகையில், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 4-ம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என தெரிவித்தனர்.  #AsianGames #LakshmananGovindan
    இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்றத்தில் இந்திய வீராங்கணை பவாத் மிர்ஸா வெள்ளி பதக்கமும், குழு பிரிவில் இந்திய அணி மற்றொரு வெள்ளியும் வென்றது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இன்று குதிரையேற்ற போட்டிகள் நடந்தது.

    பெண்கள் பிரிவில் இந்தியாவின் பவாத் மிர்ஸா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். குழுப்பிரிவு போட்டியிலும் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

    1982-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் குதிரையேற்றத்தில் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பவாத் மிர்ஸா பெற்றுள்ளார்.
    ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க தங்கம் வென்றுள்ளீர்கள். ஆசிய விளையாட்டு போட்டியில் நீங்கள் நிகழ்த்திய சாதனையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SauravGhoshal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்திருந்தார்.  

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் ஹாங்காங் வீரரான சங் மிங்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஷ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     #AsianGames2018 #SauravGhoshal
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #JoshnaChinappa
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டிடம் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதையடுத்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். எனவே அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #JoshnaChinappa
    ×