என் மலர்

  நீங்கள் தேடியது "Joshna Chinappa"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
  • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.

  பர்மிங்காம்:

  22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

  இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

  இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #JoshnaChinappa
  ஜகார்த்தா:

  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

  இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டிடம் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

  இதையடுத்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். எனவே அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.  இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #JoshnaChinappa
  ×