search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்கலம்"

    • 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை எட்டினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 11 தங்கத்துடன் ஜப்பான் முதல் இடத்திலும், 5 தங்கம், 7 வெள்ளி பெற்று சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    ×