search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annur"

    • அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார்.
    • பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23).

    இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னே ஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்காக ஏற்பாடுகளை ஆஸ்பத்திரியில் மேற் கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.இதையடுத்து விக்னேஸ்வ ரன் தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனு மதித்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் அங்கிருந்து குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி களிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ேமலும் அறுவை சிகிச்சையி ன் போது மின் ெவட்டு ஏற்பட்டு இருந்தால் அந்த கர்ப்பிணியின் நிலை என்னவாயிருக்கும் என பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    எனவே அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ தேவைகளை உடனே அரசு செய்யவேண்டும். மின் வெட்டு ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரியை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
    • 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்

    அன்னூர்

    கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.


    அப்போது,பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் நாகம்மாள், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி,ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி,ரத்தினசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் உள்ள 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றார்.

    • புதிய வீட்டுமனை இடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஆகின்றன.
    • அன்னூர் பேரூராட்சிக்கு நிரந்தரமான செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு கடந்த 6 மாத காலமாக செயல் அலுவலருக்கான இடம் காலியாக உள்ளது.

    தற்காலிகமாக கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த 6 மாத காலமாக அன்னூர் பேரூராட்சியும் சேர்த்து கூடுதலாக கவனித்து வருகின்றார்.

    இதனால் புதிய வீட்டுமனை இடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஆகின்றன. புதிதாக குடிநீர் குழாய் இணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பேரூராட்சி பகுதி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கொட்டுவதற்கான சரியான இடம் கூட தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

    ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் வாரச்சந்தை வணிக வளாக பணிகள் சீராக முடிக்கப்படுவதிலும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், கிராமப்புறங்களில் ஏற்படும் ஈ தொல்லைகளை கட்டுப்படுத்தவும், அன்றாட பிரச்சினைகளான குடிநீர் குழாய்கள் உடைப்புகள், சாலை பழுதுகள், தேங்கும் குப்பை எடுப்பதில் தாமதம் என அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகான உடனடியாக அன்னூர் பேரூராட்சிக்கு நிரந்தரமான செயல் அலுவலரை நியமிக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் அன்னூர் ஒன்றிய குழு தலைமை சரவணன் ஆகியோரின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    • நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அன்னூர்

    அன்னூர் பஸ் நிலையம் அருகே 2 நால்ரோடுகள் உள்ளன. இந்த சாலையானது கோவை, திருப்பூர், மேட்டுப் பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    தினமும் இந்த சாலையின் வழியாக 2 மற்றும் 4 சக்கரம், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் தினசரி இந்த சாலையின் மார்கமாக சென்று வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 ஆயிரத்தை கடக்கும். ஆனால் இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் தவிழ்ந்து தவிழ்ந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த குழிகளின் மூலம் வரும் புழுதியில் சிக்கி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இதே பகுதியில் காவல்துறையினருக்கு முறையாக நிழற்குடை இல்லாததாலும், வாகனங்களை திசை திருப்பி விடுவதற்கு பல்வேறு சிரமங்கள் நிலவி வருகின்றன. எனவே இந்த இரு இடங்களில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து வாகனங்களை திட்டமிட்டபடி வழி பிரித்து அனுப்ப சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மட்டும் இல்லாமல் சமூக நல ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. மேலும் புதிதாக செல்வ விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மன் அழைப்பு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    கோவிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது

    இதனைத் தொடர்ந்து இன்று காலை செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கோலா கலமாக நடை பெற்றது.சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் யாக சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம் மேல் இருந்து பல வண்ண மலர்கள் தூவப்பட்டது. விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.  

    • ரஞ்சன்குமார் பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
    • இளம்பெண் காதலை மறுத்து அவரிடம் பேசுவதை தவிற்து வந்ததாக தெரிகிறது.

    கோவை:

    பீகாரை சேர்ந்தவர் ரஞ்சன்குமார் (வயது 20). இவர் கோவை அன்னூர் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரஞ்சன்குமார் பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் அவரின் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    சில நாட்கள் கழித்து மீண்டும் தனது காதலை கூறியுள்ளார். அப்போதும் இந்த இளம்பெண் காதலை மறுத்து அவரிடம் பேசுவதை தவிற்து வந்ததாக தெரிகிறது. இதனால் ரஞ்சன்குமார் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

    இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணக்குகளை தவறாக காண்பித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் அருகே உள்ள ஜெய்ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பிரகாஷ் பாபு (வயது 35). இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ. 5 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.இந்த தகவல் கிடைத்ததும் பிரகாஷ்பாபு நிறுவனத்துக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவருக்கு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தற்போது பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்க்கும் லட்சுமி மில் அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்த ஆனந்தா (30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணக்குகளை தவறாக காண்பித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இது குறித்து பிரகாஷ்பாபு அன்னூரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து ஆனந்தாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.  

    • மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
    • 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், அன்னூர் தாலுகாவில் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தமிழக அரசு அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க கடந்த மாதம் 3-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து ஜூன் 5-ந் தேதி முதல் இங்கு கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்தனர்.

    இந்த மையத்தில் 357 விவசாயிகள் 4,68,500 கிலோ கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    வெளிச்சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ.80க்கு மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் அரசு ஒரு கிலோ கொப்பரை 105 ரூபாய் 90 காசுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.தேங்காய் கொப்பரை கொள்முதலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    அன்னூர் அருகே உள்ள சானாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50). பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 20-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த நாகராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து நாகராஜன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    அன்னூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மின்வாரிய ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில் 31 பவுன் நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம் தாமு நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இரவது மனைவி சிவகாமி (வயது 45). மின்சார வாரிய ஊழியர்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சிவகாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த கம்மல், வளையல், மோதிரம் உள்பட 11¼ பவுன் தங்க நகைகளை கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சிவகாமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே உள்ள ஒட்ரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் தவமூர்த்தி (வயது 55). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர்.

    கடந்த 7-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    அதிர்ச்சியடைந்த தவமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், வளையல், கம்மல், மோதிரம் உள்பட 19½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தவமூர்த்தி அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்து செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (53) கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்து விட்டு இரவு 9 மணியளவில் தனது மொபட்டில் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயிமாபுதூர் பிரிவு அருகே சென்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதனால் துரைசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிட்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணப்பன் மகன் பழனிச்சாமி (43) என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

    ×