search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Annur"

  • இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
  • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

  மேட்டுப்பாளையம்,

  நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்னூர் பகுதியில் நகரம் மற்றும் புறநகர் ஆகிய பகுதிகளில் 36 விநாயகர் சிலை வைக்கவும், சிறுமுகை பகுதியில் 26 விநாயகர் சிலைகளை வைக்கவும் இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர்.

  இதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்டு மாதமே விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரபட்ட நிலையில் இதுவரை சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

  நாளை விநாயகர் சதுர்த்தி வர உள்ள நிலையில் இன்று வரை விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்காத காவல்துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

  இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் ஓதிமலை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

  இதையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையிலான கட்சியினர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  ஆனால் போலீசார் தொடர்ந்து அனுமதி அளிக்காததால் இந்து அமைப்பினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. கூடுதல் போலீசார் வரவ ழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

  • இளம்பெண் தனது கணவர் வீட்டிற்கு வருவதில்லை என புகார் கூறினார்.
  • இளம்ெபண் குடிபோதையில் கணவர் மீது புகார் எடுக்க சொல்லி போலீசாரை மிரட்டியதும் தெரியவந்தது

  கோவை,

  கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாய்தோட்டத்தை சேர்ந்த 38 வயது இளம்பெண்.

  இவர் நேற்று அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் இளம்பெண் தன்னை தனது கணவர் ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்ததாகவும், தற்போது அவர் வீட்டிற்கு வருவதில்லை என புகார் கூறினார்.மேலும், கணவர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், நான் ஏற்கனவே சப்-இன்ஸ்பெ க்டராக பணியாற்றியுள்ளேன். எனது குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டாகவும், கலெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.

  எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்களை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்று கூறினார்.

  இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளம்பெண் குடிபோதையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் கணவர் மீது புகார் எடுக்க சொல்லி போலீசாரை மிரட்டியதும் தெரியவந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இளம்பெண்ணை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.

  • குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
  • நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

  அன்னூர்,

  கோவை மாவட்டம்

  அன்னூர் வட்டத்திற்கு ட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 6 குக்கிரா மங்களுடன் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

  இந்த ஊராட்சியானது கோவை வழித்தடம் சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள மரத்தடியில் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வார்கள்.

  திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பஸ்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

  ஆனால் பல ஆண்டுகளாக இவர்கள் மரத்தடியில் நின்றபடியே பஸ் ஏறுகிறார்கள். மழை காலங்களில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறுவதை காண முடிகிறது. இதனால் இங்கு பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

  இந்த கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

  • குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
  • சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அன்னூர்,

  கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த நாரணா புரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இந்த அரசு பஸ் உக்கடம், ெரயில் நிலையம், காந்திபுரம், சரவணம்பட்டி வழியாக வடுகபாளையத்தை கடந்து வாகாரப்பாளையம் வரை செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக குறித்த நேரம் காலை நேரத்தில் வராமல் உள்ளது.

  இதனால் காலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், செல்வராஜ் மற்றும் அன்னூர் போலீசார் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று நடைபெற இருந்த போராட்டத்தை கைவிடுமாறு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முன்பு போல பஸ்களை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

  • வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார்.
  • பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

  கோவை :

  கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி ராஜியா பேகம் (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார். அப்போது ராஜியா பேகம் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

  அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய அவர் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

  • மின் கம்பமானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து காணப்பட்டது.
  • மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் 2 மின் கம்பங்களை அமைத்தனர்.

  அன்னூர்

  கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் நாரணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுக பாளையத்தில் ஏ.டி காலணியில் உள்ள ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மின் கம்பமானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து காணப்பட்டது.

  இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமா னாலும் கீழே விழும் நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காண ப்பட்டனர். எனவே அந்த மின் கம்பத்தை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் செட்டிபாளையத்தில் உள்ள மின் அலுவலகத்திலும், ஊராட்சியின் சார்பாக நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் புகார்களை தெரிவித்து வந்தனர்.

  இதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

  இதனைத் தொடர்ந்து நேற்று மின்சார ஊழியர்கள் அங்கு வந்தனர். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் 2 மின் கம்பங்களை அமைத்தனர். இதற்காக மாலைமலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

  • 6 ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
  • இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

  அன்னூர்

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ளபள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

  இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

  இந்த நிலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே போராட்டக்குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

  சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். மன்னீஸ்வர சுவாமி கோவில் முன்பு பேரணி நிறைந்தது. தொடர்ந்து அன்னூர் போலீஸ் நிலையம் சென்று போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

  வணிகர் சங்கங்களுடன் பேசி விரைவில் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

  • 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது
  • பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.

  அன்னூர்:

  கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில் 21 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதையடுத்து கிராம சபை கூட்டம் 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கவுரவித்தல், மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சஜீவன் திட்டம், பருவமழை முனஎச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.

  இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர் நியமனம் செய்ய அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

  • சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்

  அன்னூர்,

  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது.

  இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை மேற் கொண்ட போது குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

  இதுகுறித்து டாக்டர்கள் அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர்அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஐ.டி.ஐ படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஐ.டி.ஐ சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

  இதுகுறித்து அவரது தந்தை அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாயமான, மாணவியை தேடி வந்தனர். அப்போது சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

  அதில் சிறுமி வெளியூரில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி மற்றும் சிறுமியுடன் தங்கி இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியுடன் இருந்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

  அப்போது மாணவியை சிறுவன் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  • புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  • இந்த கோவிலில் வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும்.

  அன்னூர்:

  அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவில். அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்சிகள், கனரக வாகனங்களை இங்கு நிறுத்தி டிரைவர்கள் வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

  இந்த நிலையில் ஆயுத பூஜை தினமான செவ்வாய்க்கிழமை மற்றும், விஜயதசமி தினமான நேற்று கருப்பராயர் கோவிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டியும், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டனர்.

  அதேபோல வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன்வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டனர். முன்னதாக கருப்பராயருக்கு மாலை அணிவித்து பொங்கல், சுண்டல், பொறி அவல், பழங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.