search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer arrested"

    • குப்புராஜ் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது
    • போலீசார் தங்க கட்டியை திருடி சென்ற நாகராஜை கைது செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குப்புராஜ் 15 பவுன் தங்க கட்டியை கள்ளாவில் வைத்து விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது நாகராஜ் தங்க கட்டியை திருடி தப்பிச் சென்றார். குப்புராஜ்திரும்பி வந்து பார்த்த போது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது. தொழிலாளியாக வேலை பார்த்து வந்த குமரேசனையும் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தங்க நகை பட்டறை உரிமையாளர் குப்புராஜ் பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டியை திருடி சென்ற நகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட 12 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆதியூரை சேர்ந்த செல்வ ராஜ் (42) என்பவர் மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    பிரதாப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த பிரதாப் வடக்கிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டனர். இதனால் கோபமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ராஜஸ்ரீ தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 50).கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜஸ்ரீ (40). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிசந்திரன் அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ராஜஸ்ரீ கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜஸ்ரீ சிங்காநல்லூர் உழவர் சந்தை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிசந்திரன் திடீரென தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவிசந்திரன் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து நடுரோட்டில் ராஜஸ்ரீயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாறியாக தாக்கி னார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து ராஜஸ்ரீ சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவிசந்திரனை கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.
    • கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    நீலகிரி

    வெலிங்டன், குன்னூரில் மதுபோதையில் பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெண்ணுக்கு பாலியல் தொல்லை நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மதுகுடித்து விட்டு போதையில் யார் வீட்டுக்குள்ளாவது நுழைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு சரவணன் வெலிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து சரவணனை மடக்கி பிடித்தனர். கட்டிட தொழிலாளி கைது இதுகுறித்த தகவலின்பேரில் வெலிங்டன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார்.
    • ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). கூலித் தொழிலாளி.இவரது மனைவி அனிதா (26). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்தநிலையில் ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார். சம்பவத்தன்று ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அனிதா பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் வெளியே சென்றார்.

    பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்து தென்னை மட்டையால் அனிதாவை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ரமேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தலையில் பலத்த காயம் அடைந்து போராடிய அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • மருதாச்சலம் தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
    • இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இவர்களது மகன் கூலித் தொழிலாளி மருதாச்சலம் (48) என்பவர் வலுக்கட்டாயமாக தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருதாச்சலம் தனது தாயின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். அப்போது அவர் தனது தாய் அணிந்து இருந்த 2 பவுன் நககைளை கழற்றி வைத்துக்கொண்டார்.

    உடலை அடக்கம் செய்த பின்னர் ராமசாமி தனது மகனிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருதாச்சலம் தனது தந்தையை தாக்கினார். பின்னர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து ராமசாமி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×