பொள்ளாச்சி அருகே மருமகனை பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி கைது

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி அருகே மருமகனை பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி கைது
Published on

கோவை,

பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆதியூரை சேர்ந்த செல்வ ராஜ் (42) என்பவர் மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளனர்.

பிரதாப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த பிரதாப் வடக்கிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டனர். இதனால் கோபமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com