ெபாள்ளாச்சி மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார்.ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார்.
ெபாள்ளாச்சி மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). கூலித் தொழிலாளி.இவரது மனைவி அனிதா (26). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் ரமேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவர் தாக்கி வந்தார். சம்பவத்தன்று ரமேஷ் வங்கி கணக்கில் உள்ள ரூ.16 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அனிதா பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் வெளியே சென்றார்.

பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்து தென்னை மட்டையால் அனிதாவை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ரமேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

தலையில் பலத்த காயம் அடைந்து போராடிய அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com