search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bus stop in Annur that has been a bush"

    • குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

    அன்னூர்,

    கோவை மாவட்டம்

    அன்னூர் வட்டத்திற்கு ட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 6 குக்கிரா மங்களுடன் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியானது கோவை வழித்தடம் சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள மரத்தடியில் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வார்கள்.

    திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பஸ்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் பல ஆண்டுகளாக இவர்கள் மரத்தடியில் நின்றபடியே பஸ் ஏறுகிறார்கள். மழை காலங்களில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறுவதை காண முடிகிறது. இதனால் இங்கு பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • அத்தியாவசிய பணிக்கு அருகே உள்ள பகுதிக்கு செல்வோரும் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.
    • புதிய பஸ் நிறுத்தம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூர் வட்டம் காட்டம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உட்பட்ட காட்டம்பட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் இதை பயன்படுத்தி வந்தனர். மேலும் வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய பணிக்கு அருகே உள்ள பகுதிக்கு செல்வோரும் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது அந்த பஸ் நிறுத்தம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் அதனை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மக்கள் அங்கு அமர முடியாமல் நீண்ட நேரம் கால் கடுக்க பஸ் வருகைக்காக காத்திருந்து பஸ் ஏறும் நிலைமை உள்ளது.

    மேலும் மழைக்காலத்தில் மழைநீர் பஸ் நிறுத்தம் முன்பு குளம் போல் தேங்கி விடுகிறது. அந்த சமயங்களில் அதன் முன்பு நிற்க கூட முடியாது. 30 அடி தூரம் தள்ளி நின்று பஸ் ஏறி வருகின்றனர். கடந்த 30 வருடங்களாக இந்த நிலைமையே காணப்படுகிறது.

    பாழடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைத்து புதிதாக பஸ் நிறுத்தம் கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடமும், பேரூராட்சி தலைவரிடமும் பலமுறை கடிதம் கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த பஸ் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×