அன்னூரில் 4 ஆண்டுகளாக சாய்ந்து கிடந்த மின்கம்பம் அகற்றம்

மின் கம்பமானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து காணப்பட்டது.மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் 2 மின் கம்பங்களை அமைத்தனர்.
அன்னூரில் 4 ஆண்டுகளாக சாய்ந்து கிடந்த மின்கம்பம் அகற்றம்
Published on

அன்னூர்

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் நாரணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுக பாளையத்தில் ஏ.டி காலணியில் உள்ள ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மின் கம்பமானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து காணப்பட்டது.

இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமா னாலும் கீழே விழும் நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காண ப்பட்டனர். எனவே அந்த மின் கம்பத்தை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் செட்டிபாளையத்தில் உள்ள மின் அலுவலகத்திலும், ஊராட்சியின் சார்பாக நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து நேற்று மின்சார ஊழியர்கள் அங்கு வந்தனர். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் 2 மின் கம்பங்களை அமைத்தனர். இதற்காக மாலைமலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com